Posts

Showing posts from December, 2016

ஃபேஸ்புக் பகிர்வில் இருந்து

Image
ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது. மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ: எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.! இந்தநாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் ... எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை ப...

யாருக்கு அதிக மகிழ்ச்சி???

Image
  யாருக்கு அதிக மகிழ்ச்சி??? மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!! மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே…. கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்.. (மறுநாள் இரவு) கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண? மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலக...

பிரசவ வலி ஆரம்பமாகி விட்டது

Image
பிரசவ வலி ஆரம்பமாகி விட்டது அந்தப் பெண்ணுக்கு... அறைக்கு வெளியே, கவலையுடன் காத்திருக்கிறார்கள் உறவினர்கள்... சற்று நேரத்தில், பிறந்த குழந்தையின் “குவா குவா” அழுகை சத்தம். உள்ளே இருந்து, வெளியே எட்டிப் பார்த்த ஒரு பெண் சொல்கிறாள் : “பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்..” “ஆஹா..” என்று முகம் மலர்கிறார்கள் வெளியே காத்திருந்த அத்தனை உறவினர்களும்...! அவ்வளவுதான் ! ஆரம்பித்து விட்டது கொண்டாட்டம் ! அந்தக் கிராமத்தில்...! ஆம்... 111 மரங்களை நடும் விழா ஆரம்பமாகி விட்டது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ? ஒரு பெண் குழந்தை பிறந்ததை எந்த ஊரில் இப்படி உற்சாகத்துடன், ஊரோடு சேர்ந்து கொண்டாடுகிறார்கள்..? நமது இந்தியாவில்... ராஜஸ்தான் மாநிலத்தில்... பிபிலாந்திரி என்ற கிராமத்தில்... ஆம். ஒரு பெண் குழந்தை பிறந்தால், உடனடியாக ஆரம்பமாகி விடும் இந்த “மரம் நடும் விழா”. 2006-ம் ஆண்டில் இருந்து இது நடக்கிறது. அதற்கு முன்... அந்த கிராமமும் நமது உசிலம்பட்டி போலத்தான் இருந்தது. கர்ப்பத்தில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கள்ளிப்பால் போல ஏதோ ஒரு பாலை கொடுத்து கதையை முடித்து விடுவார்...