About Me
நம் வாழ்க்கையில் தினமும் பல மனிதர்களை சந்திக்கிறோம். பல அனுபவத்தை பெறுகிறோம் அதில் சில அனுபவம் நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். மேலும் பரவசத்தில் ஆழ்த்தும் சில தருணங்கள் நம்மை அழ வைக்கும். வாழ்க்கை என்பது இன்ப துன்பங்கள் நிறைந்தது. பல எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்க நேரிடலாம். சில தருணங்கள் எண்ணத்தில் நீங்காத இடம் பிடித்திருக்கும். அதை நினைக்கும் போதே நாம் மகிழ்ச்சி கொள்வோம். அப்படிப்பட்டவை தான் இந்த முதல் காதல், முத்தம் என்று பல அற்புத தருணங்கள். நாமே நினைத்தாலும் அதை மறக்க முடியாது.
இத்தகைய நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு செல்லும் போது நம்மையே அறியாமல் நம்முள் எழும் எண்ணங்கள் அற்புதத்தின் உச்சம். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் வருவதைப் போல நம்மை சுற்றி ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும். அத்தகைய நினைவுகள் வாழ்க்கை என்னும் புத்தகத்தில், முக்கியமான பக்கங்களாய் அமையும். இத்தகைய சில தருணங்களை ஒரு தொகுப்பாய் இங்கு காண்போம்.
சைக்கிள் ஓட்டிய முதல் நாள்
சைக்கிள் ஓட்டிய முதல் அனுபத்தை மறக்கவே முடியாது. பெடலை அழுத்தி சைக்கிளை மிதிக்கும் பொழுது, முகத்தில் வருடி செல்லும் காற்றை என்றுமே மறக்க முடியாது
பட்டம் பெற்ற நாள்
பட்டம் பெற்ற நாள் பட்டப்படிப்பு முடித்து, பட்டம் பெற்ற நாளை என்றும் நினைவில் வைத்திருப்போம். ஏனெனில் பாடுபட்டு படித்து பட்டம் பெறும் நாள் என்றும் நெஞ்சில் மாறா நினைவுகளை பதிக்கும்.
முதல் காதல்
அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் தருணம் முதல் காதல். அந்த அனுபவத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. மேலும் மனதிற்கு பிடித்த நபரை, நாம் நேசித்த பொழுதை என்றும் மறக்க முடியாது
முதல் முத்தம்
முதல் முத்தம் கொடுத்த அனுபவம் அற்புதம் நிறைந்த தருணம். அந்த முத்தம் கொடுத்த நெகிழ்ச்சியும், ஆனந்தமும் என்றும் நினைவில் தங்கும்.
நம்மவருடன் கழித்த இரவு
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அன்பிற்குரியவருடன் கழித்த முதல் இரவை மறக்கவே முடியாது
திருமண நாள்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகின்றது என்பர். அது உண்மையே. அதற்காக செய்த விழா, வாங்கிய பொருட்கள், வெளியே சென்றது அனைத்தையும் என்றும் மறக்க முடியாது.
முதல் சம்பளம்
கொஞ்ச பணமானாலும், நம் திறமையை நமக்கு காட்டி அங்கீகாரம் பெற்று தந்த முதல் சம்பளத்தை மறக்க முடியுமா?
குழந்தையை கையில் ஏந்திய தருணம்
முதன் முதலில் உங்கள் குழந்தையை கையில் ஏந்திய தருணத்தை எப்படி மறக்க முடியும். முழுமையான ஆனந்தத்தை அளித்த தருணம் அது. என்றும் நம் நினைவில் தங்கிய முத்தான தருணம்.
குழந்தை
குழந்தை முதன் முதலில் அம்மா, அப்பா என்று அழைத்த முதல் தருணம் முத்தானது. அது உங்களை பார்த்து முதலில் சிரித்தது, நடந்தது, அவர்களின் முதல் பிறந்த நாள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் என்றும் மறக்க முடியாது.
இதுப் போன்று இன்னும் பல உள்ளன. உங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்றால் எதை சொல்வீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்

சைக்கிள் ஓட்டிய முதல் நாள் |

Comments
Post a Comment