Posts

Showing posts from January, 2017

கண்களையும் கவனியுங்கள்

Image
கண்களையும் கவனியுங்கள் நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்

என் மனைவி என்னை

Image
என் மனைவி என்னை பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். கல்யாண வீட்டில் ”என்னங்க” என்றால் தெரிந்தவர் வந்திருக்கிறார் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம். வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால் பூவாங்க வேண்டும் என்று அர்த்தம். மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால் மருத்துவரிடம் என்ன பேசவேண்டும் என்று அர்த்தம். வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம். பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால் பணம் வேண்டும் என்று அர்த்தம். சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம். சாப்பிடும்போது என்னங்க என்றால் சாப்பாடு சுவைதானா என்று அர்த்தம். கண்ணாடி முன் நின்று என்னங்க என்றால் நகை அழகா என்று அர்த்தம். நடக்கும்போது என்னங்க என்றால் விரலை பிடித்துகொள்ளுங்கள் என்று அர்த்தம்.