ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா?
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம், தமிழகம் முழுவதும் அமைத்துள்ள 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், ஆதார் அட்டை திருத்தம் செய்துகொள்ளும் வசதி, இன்று முதல் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம், தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் அமைத்துள்ளன. அந்த மையங்களில், ஆதார் அட்டை திருத்தம் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. அதாவது, ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள், தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை, இன்று முதல் திருத்தம் செய்துகொள்ளலாம். பொதுமக்கள் கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவுசெய்து, தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் திருத்தம் செய்துகொள்ளலாம். 5 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் இலவசமாக திருத்தம் செய்துகொள்ளலாம். மற்றவர்கள், 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் , பெருநகர சென்னை மாநகராட்சித் தலைமை அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் ஆகிய இட...