Posts

Showing posts from July, 2017

ஒரு கல்லூரியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு

ஒரு கல்லூரியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு போடுல உனக்கு பிடித்த உறவுமுறைகளை 30 பேரை எழுது என்றார் … மாணவன் அப்பா , அம்மா , தாத்தா , பாட்டிமனைவி , மகன் , மகள் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி , சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை , காதலி , நண்பன் , இப்படியாக 30 பேர் எழுதினான் . டீச்சர் … கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க , வேண்டும் … யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி என்றார் . மாணவன்... காதலி , நண்பன் , பக்கத்து வீட்டுகாரர் ,,, இவர்களை பெயரை அழித்தான் டீச்சர் மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னா மாணவன் . இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான் ,.. கடைசியாக அப்பா , அம்மா , மனைவி , மகன் , மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது டீச்சர் இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும் யார் நீக்குவாய் என்றார் மாணவர்கள் அனைவருக்கும் கோபம் மாணவன் வருத்தத்துடன் அப்பா , அம்மா பெயரை அழித்தான் டீச்சர் மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார் மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ,,, யார் பெயரை அழிப்பான் என்று . மாணவன் மிகுந்த சோகத்துடன் மகன் , ...

திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும்

Image
திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும் சரி என்றான். சிறிது நேரத்திற்கு பிறகு கணவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொன்னுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார். மறுபடியும் சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம். இந்த முறை மனைவி எழுந்து கணவனை போல் ஜன்னலில் எட்டிப் பார்த்தால். தன் மகளை பார்க்க கையில் திண்பண்டத்துடன் காத்திருக்கிறார் அவளின் தந்தை. ஆனால் இவளோ கதவு அருகே நின்று அழுதுக் கொண்டிருக்கிறாள். பெண்கள் அழுவது எந்த ஒரு நல்ல ஆண்களுக்கும் பிடிக்காது. ஏன் எதற்காக அழுகிறாய் என்று கணவன் அதட்டி கேட்க அப்பா!!! என்று கை நீட்டி அவன் தோளில் சாய்ந்து இன்னும் சத்தமாக அழுகிறாள். மெதுவாக சிரித்த கணவன் சரி கதவை திற என்கிறான். அவனை பிடித்து இழுத்து அவன் முகத்தில் ஆசையாக முத்த மழை பொழிந்து கதவை த...

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு

Image
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு என்றுமே கெட்டு போகாத கெமிக்கல் ஹார்லிக்ஸ் *காம்ப்ளான் உங்கள் சத்து மாவே அல்ல..*. *இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..* *இதை தயாரிக்கும் முறை:* இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. *தேவையான பொருட்கள்:* ராகி 2 கிலோ சோளம் 2 கிலோ நாட்டு கம்பு 2 கிலோ பாசிப்பயறு அரை கிலோ கொள்ளு அரை கிலோ மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ சோயா ஒரு கிலோ தினை அரை கிலோ கருப்பு உளுந்து அரை கிலோ சம்பா கோதுமை அரை கிலோ பார்லி அரை கிலோ நிலக்கடலை அரை கிலோ மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ ஜவ்வரிசி அரை கிலோ வெள்ளை எள் 100 கிராம் கசகசா 50 கிராம் ஏலம் 50 கிராம் முந்திரி 50 கிராம் சாரப்பருப்பு 50 கிராம் பாதாம் 50 கிராம் ஓமம் 50 கிராம் சுக்கு 50 கிராம் பிஸ்தா 50 கிராம் ஜாதிக்காய் 2 மாசிக்காய் 2 *செய்முறை  :* ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இ...

மனசை தொட்ட பதிவு

Image
மனசை தொட்ட பதிவு. ..! இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”. கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்). தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்? அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள், ♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”. இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான். அவள் கேட்டாள் "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”...

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை

Image
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக.... இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்..... "ஏம்பா நீ சைலண்டா இருக்க......" 'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்' "எப்பிடிப்பா கறக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?" 'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...' பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்ன...

பள்ளியறையில் மட்டுமல்ல‌ சமையலறையிலும் அவளுக்குத் துணை கொடு

Image
பள்ளியறையில் மட்டுமல்ல‌  சமையலறையிலும் அவளுக்குத் துணை கொடு பள்ளியறையில் மட்டுமல்ல‌ சமையலறையிலும் அவளுக்குத் துணை கொடு. மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு மற்றைய நாளெல்லாம் சேயாகு. அவள் ஆடைகளை சலவை செய்வது அவமானம் அல்ல. நீ வழங்கும் சம தானம். இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு. இயலாத நிலையிலே அவள் இருந்திடக் கண்டாலே உறவுதனைத் தவிர்த்திடு. உப்பு கறிக்கு கூடினாலும் தப்பு சொல்லி ஏசாதே. உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும் அதையும் ருசிக்க தவறாதே. சின்னச் சின்ன சண்டைகள் தினம்தோறும் போட்டுக்கொள் சினம்கூடி பெரும்சண்டை வந்திடாமல் பார்த்துக்கொள். அடிக்கடி உறவு வைத்தால் அலுத்துமே போய்விடும் அவ்வப்போது உறவுகொண்டால் ஆனந்தம் பெருகிடும். அவள் கர்ப்பம் சுமக்கையில் நீ அவளை சுமந்திடு. அவள் வேலையில் அரைவாசி உன் கையில் எடுத்திடு. சிலநாளில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும் அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும் உறவது முடிந்த பின்னே உன்பாட்டில் தூங்காதே உன்னவள் உன் மார்பில்தூங்க‌ ஓரிடம் கொடுக்க தவறாதே. தமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல். தப்பு ...

என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது

Image
என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது 😞 எவனோ ஒருவன் போல் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன் 😞 தாடி வளர்க்கும் வயதும் இல்லை 😣 போடி என்று சொல்ல மனமும் இல்லை 😘 🙁 என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள் அவரோடு நின்று நிழற்படம் எடுத்து கொள்கிறாள் 😓 😔 கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள் அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள் 😥 😖 அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல் இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி 😘 😒 நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள் 😞 😘 அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது 😏 அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை அணிந்திருக்கிறாள் 😐 😑 அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல 😪 யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள் இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள் 😰 😞 ஏமாந்தவன் எதிரிலே இருக்க இன்னொருவனுடன் உனக்கு திருமணம் 😏 😣 இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது அவள் கழுத்திலே தாலி கட்டப்போகு...