நண்பர்கள் தின வரலாறு..!
ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருக்கும். நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம் நண்பர்கள் தின வரலாறு..! இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இலக்கியங்கள் சொல்லித் தந்த நட்பின் இலக்கணம்..! சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..? கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்...