மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதி
மாஸ்டர் திரைப்படத்திலிருந்து அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடிய ‘பொளக்கட்டும் பற பற' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய் தனது 64-வது திரைப்படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. இத்திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ‘குட்டி ஸ்டோரி' பாடல் கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியாகி செம வைரலானது. அதையடுத்து, ‘வாத்தி கம்மிங்', ‘வாத்தி ரெய்டு' என அடுத்தடுத்து வெளியான மிரட்டலான பாடகள் விஜய் ரசிகர்களை இரங்கி ஒரு டான்ஸ் போடவைத்தது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, முன்னதாக வெளியான 3 பாடல்களுடன் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது பேசிய இசையமைப்பாளர் அனிருத் “இன்னும் இரண்டு பாடல்கள்” இருப்பதாகவும், விரைவில் அவற்றையும் வெளியிடப்படுவதாக கூறினார். மேலும், கொரோனா தொற்று காரனமாக ‘மாஸ்டர்' திரைப்படத்தில் ரிலீஸ்தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்களுக்கு ‘மாஸ்டர்' படக்குழு மாஸான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதாவது, இப்படத்தில் விஜய்...