அதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்! | Interesting Facts About Human Brain
அதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்! நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு இது. நமது நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்துகிறது மூளை. மூளையைப்பற்றிய சில உண்மைகளை நாம் பார்க்கலாம்… 1. நமது மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது. 2. மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது. 3. நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும். 4. 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற...