காதலுக்காக காத்திருப்பது சுகமே!
காதலுக்காக காத்திருப்பது சுகமே!
உண்மையான காதலுக்காக காத்திருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அவ்வாறு காத்திருப்பவரையும் அழகுபடுத்தி, அவர் பலவிதமான நல்காரியங்களை செய்ய வைக்கிறது. ஆகவே உண்மையான காதலுக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்பதை பார்க்க
காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். பருவம் வந்த ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும், ஒருவருக்கு ஒருவர் மையல் கொள்ளும் போது இந்த காதல் துளிர்க்கிறது. உண்மையான காதல் வளர்வதற்கு சில முக்கியமான காரணிகள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் காதலுக்காக காத்திருப்பது ஆகும்.
காதலுக்காகக் காத்திருப்பதைப் பற்றி ஏராளமான கருத்துகளும், விமர்சனங்களும் உள்ளன. சிலர் காதலுக்காகக் காத்திருப்பது என்பது ஒரு போற்றத்தக்க மதிப்பீடு என்றும், மதிப்புக்குரியது என்றும் நம்புகின்றனர். அதே நேரத்தில் வேறு சிலரோ, இது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கருதுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், காதலில் காத்திருப்பது என்பது நமது முழு ஆற்றலையும் செலவழித்து, இறுதியில் ஒன்றுமே பெறாமல் இழப்பது ஆகும் என்று நம்புகின்றனர்.
பொதுவாக, ஒருவருடைய காதலுக்காக மற்றும் அவருடைய காதல் உறவிற்காக அவர் முடிவெடுக்கும் வரை காத்திருப்பது என்பது எப்போதும் ஒரு உண்மையான காதலுக்கு உத்திரவாதம் அளிக்காது. உண்மையான அன்பு இல்லாமல், அது ஒரு மதிப்பிற்குரிய காதலாக மாறாது.
ஒருவர் தான் பார்க்கும் அனைவரோடும், உண்மையான அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அவருடைய இன்ப துன்ப நிகழ்வுகள் அனைத்திலும் இறுதிவரை அவரோடு இருப்பவர்களோடு மட்டுமே உண்மையான அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
ஒரு சிலருக்கு, காதலுக்காகக் காத்திருப்பது என்பது அர்த்தமற்ற ஒன்றாகத் தெரிகிறது. ஏனெனில் அது காதலுக்காகக் காத்திருப்பவருடைய உணர்ச்சிகளை சாகடித்துவிடும். அதோடு அவ்வாறு காத்திருப்பவர்களை, அவர்களோடு நெருங்கி இருப்பவர்களிடம் இருந்தும், அவர்களைத் தேடிவரும் நல்வாய்ப்புகளிடம் இருந்தும் பிரித்துவிடும். இறுதியாக காத்திருக்கும் காலமும் எந்த ஒரு கெடுவும் இல்லாது முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கும்.
எனினும் உண்மையான காதலுக்காக காத்திருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அவ்வாறு காத்திருப்பவரையும் அழகுபடுத்தி, அவர் பலவிதமான நல்காரியங்களை செய்ய வைக்கிறது. ஆகவே உண்மையான காதலுக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காதலுக்காக காத்திருத்தல் - சும்மா இருப்பது அல்ல
ஒருவருடைய உண்மையான அன்புக்காகக் காத்திருப்பது என்பது, வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காமல், வாழ்க்கைக்காக ஒன்றும் செய்யாமல், சும்மா இருப்பது என்று அர்த்தம் அல்ல. அதோடு ஒருவருடைய காதலில் விழுவது மற்றும் அவருடைய காதல் உறவில் ஈடுபடுவது பற்றி பகல் கனவு காண்பது அல்ல. மேலும் நாம் விரும்பும் ஒருவரோடு அமர்ந்து, எதிர்கால வாழ்க்கைக்காகத் திட்டமிடக்கூடிய செயலும் அல்ல.
மாறாக, காதலுக்காகக் காத்திருக்கும் போது, உங்களுடைய வாழ்க்கைக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய கடமைகளில் ஈடுபடலாம். புதிய காரியங்களைப் பற்றி படிக்கலாம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். தன்னார்வப் பணிகளில் ஈடுபடலாம். மேலும் சமூகச் செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். அவை உங்களது உள்ளார்ந்த வாழ்வை வலுப்படுத்த உதவும். உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் உங்களின் ஒட்டு மொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த உதவும்.
காதலுக்காக காத்திருத்தல் - உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விரும்பும் நபரிடம் பார்த்தல்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், காதலுக்காக காத்திருப்பது என்பது நீங்கள் விரும்பும் ஒருவரை உங்களது எதிர்கால இணையராக பார்ப்பது ஆகும். நீங்கள் அவரிடம் ஒரு நீண்ட கால உறவை எதிர்பாக்கிறீர்கள், குறுகிய கால உறவை அல்ல. நடைமுறையில் பிரச்சினைகள் இருந்தாலும், உண்மையான அன்பு இருக்கும் வரை அந்த உறவு நிலைத்து நிற்கும்.
காதலுக்காகக் காத்திருத்தல் - உண்மையான காதலுக்கு உங்களையே முழுமையாகத் தருதல்
உண்மையான காதல் தன்னலமற்றது. அது அன்பு செய்யும் ஒருவருக்காக உங்களையே முழுமையாகக் கொடுப்பது. ஆகவே பொறுமையாகக் காத்திருப்பது என்பதும் உண்மையான காதலின் வெளிப்பாடு ஆகும். நீங்கள் அன்பு செய்யும் ஒருவர் திருமணம் வரையில் அல்லது உங்களைத் தன்னுடைய சரி பாதியாக உணரும் வரை காத்திருக்க வேண்டும்.
காதலுக்காகக் காத்திருத்தல் - உங்களை நீங்கள் மதிப்பதில்லை என்று பொருள் அல்ல
உங்களை ஒருவர் முழுமையாக அன்பு செய்கிறார் என்றால், அவர் உங்களை எதற்காகவும் காத்திருக்க வைக்கமாட்டார் என்று சிலர் கூறுகின்றனர். எந்தவிதமான உறுதியும் அளிக்காமல், ஒருவர் உங்களை காத்திருக்க வைத்தால், அவர் சுயநலமுடன் இருக்கிறார் என்று பொருள் என்று தெரிவிக்கின்றனர்.
உங்களின் அன்பருக்காக நீங்கள் காத்திருக்கும் போது, அவரோடு இணைந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக, நீங்கள் உங்களையே முழுமையாகக் கையளிக்கிறீர்கள். அவ்வாறு நீங்கள் காத்திருக்கும் போது, உங்களுடையத் தேவைகளை சமரசம் செய்து கொண்டு, நீங்கள் பெற வேண்டியதைவிட குறைவாகவே பெறுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் அன்பரின் காதலுக்காக விரும்பிக் காத்திருக்கலாம். அதே நேரத்தில் உங்களின் சுயமரியாதை மதிக்கப்பட வேண்டும். உங்கள் மனதில் பயமும் கவலையும் இருக்கலாம். ஆனால் அவற்றிலேயே உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். அதற்குப் பதிலாக வீட்டு வேலைகளில் ஈடுபடலாம். இவை உங்களை எதிர்காலத்தில் உங்களுடைய வருங்கால அன்பரோடு ஒரு பொறுப்பான இணையாக இருப்பதற்கு உதவி செய்யும்.
காதலுக்காகக் காத்திருத்தல் - ஒரு நல்ல உணர்வு இருப்பதாக உணர்தல்
நீங்கள் காத்து இருந்ததற்காக, உங்களின் அன்பர் ஒரு நாள் உங்களுக்கு நன்றி சொல்வார் என்று நம்புகிறீர்கள். ஆனால் உண்மையில் காத்திருத்தலில் ஏராளமான நிச்சயமற்ற நிலைகள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களுடைய வருங்கால இணையரை சந்திப்பதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது உங்களை அன்பு செய்பவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஒருவருக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது உங்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இறுதியில்தான் பதில் கிடைக்கும்.
உங்களின் அன்பருடையக் காதலுக்காக, நீங்கள் பொறுமையாகக் காத்திருந்ததற்காக அவர் உங்களுக்கு நன்றி தெரிவித்தால், நீங்கள் நன்றாக உணர்வீர்கள். சவால்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், நீங்கள் அவருக்காக மிகப் பொறுமையுடன் காத்திருந்ததற்காக அவர் உங்களை நிச்சயம் பாராட்டுவார்.
காதலுக்காகக் காத்திருத்தல் -தியாகத்திற்கான தருணம்
நீங்கள் பொறுமையுடன் காத்திருந்ததற்காக, உங்களுடைய அன்பர் உங்களுக்கு ஒரு நாள் நன்றி கூறினால் நீங்கள் நன்றாக உணர்வீர்கள். நீங்கள் அவருக்காகக் காத்திருந்த தியாகத்தை எண்ணி கண்டிப்பாக உங்களுக்கு நன்றி சொல்வார். காதல் அல்லது திருமண உறவுக்கு தியாகம் முக்கியமான ஒன்றாகும். உங்களுடைய அன்பரோடு உள்ள உறவுக்கு தியாகம் அடித்தளமாக இருக்கிறது.
காதலுக்காகக் காத்திருத்தல் - உங்களுக்குப் பிடித்தவற்றை ஒதுக்கி வைத்தல்
உங்களுக்குப் பிடித்த மதுவை விலக்கி வைப்பது என்பது உங்களுடைய வருங்கால இணையருக்கு நீங்கள் அளிக்கும் அன்பு பரிசு ஆகும். உங்களின் வருங்கால இணையருக்காக உங்களுடைய முழுமையான நேரத்தை ஒதுக்கி வைப்பதன் மூலம் உங்களின் உண்மையான மற்றும் தூய்மையான காதலை அவருக்கு வெளிப்படுத்த முடியும். மதுவிலக்கைக் கடைபிடிப்பது மட்டும் உங்களின் உண்மையான அன்பை நிரூபிப்பதற்கான வழி அல்ல.
உங்களுடைய உண்மையான அன்பரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு நீங்கள் பலருடன் உறவில் இருந்திருக்கலாம். அதற்காக நீங்கள் குற்ற உணர்ச்சி அடையத் தேவையில்லை. ஏனெனில் இந்த உலகம் என்பது நிறைகளும், குறைகளும் நிரம்பிய ஒன்றாகும். அது போலவே நீங்களும் நிறைகளுடனும், குறைகளுடனும் நிறைந்திருக்கிறீர்கள். அதனால் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை.
காதலுக்காகக் காத்திருத்தல் -நம்பிக்கையைக் கையில் வைத்திருத்தல்
உண்மையான காதலுக்காக நீங்கள் காத்திருக்கும் போது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் இயல்பாகவே தோன்றும். இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற அவநம்பிக்கை தோன்றும். யாராவது உங்கள் அன்பரோடு உங்களைச் சேர்த்து வைக்கமாட்டார்களா என்று தோன்றும். ஆனால் எதுவும் நடக்காது. ஒவ்வொரு நாளும் நீங்கள் காத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் காத்திருத்தலில் ஆர்வமின்மை தோன்றும்.
இதே நிலை தொடர்ந்தால், வாழ்நாள் முழுவதும் தனியாகத்தான் இருப்போமோ
என்று உங்களுக்குத் தோன்றும். எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு உறுதியான பிடிப்பு இல்லையென்றால் இது போன்ற சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றி உங்களின் தன்னம்பிக்கையைக் கலங்கடிக்கும். எனினும், அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது உங்களுக்கு உதவாது. மாறாக அது உங்களை விரக்திக்கு இட்டுச் செல்லும். அதோடு துன்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தும்.
நீங்களும் உங்களின் வருங்கால அன்பரும் எதிர்பார்க்கும் எதிர்காலம் நன்றாக அமையும் என்று நம்பி காத்திருங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் நம்பிக்கையயும், மரியாதையையும் வளர்ப்பது எளிதாக இருக்கும்.
இறுதியாக
இந்த உலகில் இருக்கும் அனைவரும் காதலுக்காகக் காத்திருப்பதில்லை. ஏனெனில் காத்திருப்பது என்பது உண்மையில் சோர்வான மற்றும் நம்பிக்கையற்ற ஒன்றாகும். சிலருக்கு காத்திருப்பது என்பது எளிதாகக் கைகூடலாம். ஆனால் பலருக்கு இது நஞ்சாகத்தான் இருக்கிறது. ஒருவேளை இது நஞ்சாக இருக்கிறது என்று தெரிந்தால், நீங்கள் உடனே அதைவிட்டு வெளியே வந்து, உங்களோடு தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் வேறெருவருடன் இணைந்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.
காதலுக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருடைய காதலுக்காக காத்திருப்பதற்கு முன்பாக பல காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்களின் காத்திருப்புக்கு அந்த நபர் தகுதியானவரா என்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்புவது அதுதானா என்பதை ஆழமாக சிந்தியுங்கள்.
உண்மையான காதல் அரிதானது. அதற்காக் காத்திருப்பது என்பது எளிதாக இருக்காது. ஆனால் இறுதியில் அதற்கான பலன் உறுதியாகக் கிடைக்கும்.
இறுதியாக உங்கள் காதல் கைகூடும் போது, உங்களுடைய காத்திருப்புக்கு மதிப்பு இருக்கிறது என்பதை நீங்கள் உணரலாம். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இதற்காகத்தான் இவ்வளவு நாட்களாகக் காத்திருந்தேன் என்று நீங்கள் உறுதியாகக் கூறலாம்.
Comments
Post a Comment