Posts

Showing posts from June, 2016

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்

Image
பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது. நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந்துகளின் பக்க விளைவாலும், சிகிச்சைகள் காரணமாகக் கூட தலை முடி உதிரலாம். தலை முடி சுத்தமில்லாமல் இருப்பது, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டீஷனர் காரணமாகக் கூட தலைமுடி உதிரலாம். அடிக்கடி டிரையர் உபயோகிப்பது, அழுத்தமாக சிகை அலங்காரம், அயர்னிங் போன்றவையும் தலைமுடி உதிரக் காரணமாகலாம். அதிகமான மன அழுத்தம் கூட முடி உதிரக் காரணமாக இருக்கும். இதற்கு யோகா போன்...

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

Image
*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது... *அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது... *கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது... *அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது... *ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க... *புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது... *நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது... *பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது... *நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது... 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!

இதயத்தைப் பலப்படுத்தும் சீத்தாப்பழம்

Image
*சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர். *சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது. மருத்துவ பயன்கள்: 1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். 2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். 3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். 4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும். 5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை க...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு பெற இயற்கை மருத்துவ டிப்ஸ்

Image
* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். * பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால்,முகத்தின் பொலிவு அதிகரிக்கும். * தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும்,முகம் பொலிவுடன் காணப்படும். * கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும். * தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். * முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால்,கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும். * முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இ...

இதயத்தைப் பலப்படுத்தும் குங்குமப்பூ

Image
குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர். குங்குமப்பூ தரும் அழகு குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும்...

தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்

தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்   நன்பர்களே கோபுரம் கட்டி உச்சத்தில் செம்பினை நட்டு வழிபடும் முறையை செய்திடுவோம் அது இடியை தடுத்து பலர் குடியை காக்கும் அதிசய அறிவியல் செய்திடுவோம் ............! கோவில் சுவற்று கருங்கல் எல்லாம் மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால் மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே .! எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள் கூட சமநிலை அலைகளை பரப்புமடா அடித்தவன் காதில் தெறிக்கும் போது உற்சாக ஊற்று பெருகுமடா .....! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம் அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில் இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம் ........! சாணம் கரைத்து வீட்டில் தெளித்து ஆன்டி-பயோடிக் செய்திடுவோம் நாளும் தூய்மை காத்திடுவோம் .......! மார்கழி பொழியும் மாக்கோலம் வரைவோம் அதை ஊர்வன உண்டு பிழைத்திடுமே இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே .....! ஈர நெற்றியில் காய்ந்த விபூதி பட்டை அடித்து திரிந்திடுவோம் தலை நீர் உறிந்து தலை வலி குறையும் அதிசயம் தன்னை நடத்திடுவோம் ...........! குனிந்து நிமிர்ந்து...