தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்

தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம் 

நன்பர்களே
கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!

கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே .!

எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள்
கூட சமநிலை அலைகளை பரப்புமடா
அடித்தவன் காதில் தெறிக்கும் போது
உற்சாக ஊற்று பெருகுமடா .....!

கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம்
அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில்
இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம் ........!

சாணம் கரைத்து
வீட்டில் தெளித்து
ஆன்டி-பயோடிக் செய்திடுவோம்
நாளும் தூய்மை காத்திடுவோம் .......!

மார்கழி பொழியும்
மாக்கோலம் வரைவோம் அதை
ஊர்வன உண்டு பிழைத்திடுமே
இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே .....!

ஈர நெற்றியில் காய்ந்த விபூதி
பட்டை அடித்து திரிந்திடுவோம்
தலை நீர் உறிந்து
தலை வலி குறையும்
அதிசயம் தன்னை நடத்திடுவோம் ...........!

குனிந்து நிமிர்ந்து பெண்களை எல்லாம்
வேலை செய்ய சொல்லிடுவோம்
இடுப்பு எலும்பு விலக்கம் அடைகையில்
சுக பிரசவம் தன்னை அடைந்திடுவோம் .......!

சூரியன்
உதிக்கும் முன்பும்
மறைந்த பின்பும்
உணவை கையில் தொடமாட்டோம்
இரவில் உணவு
ஜீரண குறைவு
அதிலும் அறிவியல் வைத்ததை
சொல்லமாட்டோம் .............!

தலையில் கொட்டி
கணபதி வணங்கி அந்நாளை
இனிதாய் தொடங்கிடுவோம்
நினைவாற்றலை நாளும் வளர்த்திடுவோம் .....!
சனியின் கண்ணில்
புற ஊதாக்கதிரை கண்டு
அவன் கண்ணை கருப்பு துணியால்
கட்டி வைத்தவன் தமிழனடா .........!

நாலாயிரம் நோயை ஒன்றாய் போக்கும்
அதிசயம் அறிந்தவன் தமிழனடா
துளசி மாடம் வீட்டில் வைத்து
வணங்கியது அந்த நோக்கமடா...........!

இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு
என்னிடம் வந்து கேளுமடா
விஞ்ஞானம் மெய்ஞானம்
இரண்டும் கற்ற அறிவியல் மேதை தமிழனடா
என் தாத்தன் பாட்டன் வாய்வழி
சொன்ன ஒற்றை நூல் தான்
உன் அறிவியல் என்பதை உணருமடா ....!


Comments

Popular posts from this blog

இரு பொக்கிஷம்

காதலுக்காக காத்திருப்பது சுகமே!

இறால் பொடிமாஸ் (Shrimp Masala)