ஒருநாள் மாறும்...




தரையில் கிடக்கும் காகிதமும்
நிமிர்ந்து பார்க்கும் பட்டமாக மாறலாம்..

வெற்று காகிதத்தில்
எழுத்துக்கள் கோலமிட்டால்
அறிவை தேடும் புத்தகமாக மாறலாம்..

உதவாத கல்லும் கூட - உளி பட்டால்
ஆலயம் தொழும் சிலையாக மாறலாம்..

யாரும் முடியாதவர் அல்ல..
எவரும் தாழ்ந்தவர் அல்ல..

ஒவ்வொருவரிடம் ஒவ்வொன்றை
கற்கலாம்..

காலத்தை கண்களாக மதித்து
எழுந்து ஓடினால்
நேரம் பொன்னாக மாறலாம் அல்ல -
நிச்சயம் - ஒருநாள் மாறும்...

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!