சமையலில் நமக்கு தெரியாமல் விடும் சில தவறுகள்!
தெரிந்திருக்க வேண்டியவை! ஒவ்வொருநாளும் சமையல் என்பது பெண்களுக்கு தலையிடிதான். அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வேலைக்குப் போவதற்கு முன்னர் குடும்பத்தில் உள்ள அத்தனைபேருக்கும் காலையுனவு, மதிய உணவு என்பவற்றை தயாரித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். இப்படியான நிலையில் சமையலை இலகுவாக்க சில உத்திகளை பெண்கள் கையாள்வதூண்டு. ஆனால் அந்த இலகுவாக்கும் செயல்கள் பல கண்ணுக்குத் தெரியாத தவறுகளையும், பாதகங்களையும் உண்டாக்கி விடுகின்றன. சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டு விடுவதோ தவறு அல்ல.அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும். ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல்வெறும் ருசிக்காகவும்,அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது. 1. கழுவுவதில் கவனம் வேண்டும் எந்த உணவு பொருளையும்கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால்,அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே...