சமையலில் நமக்கு தெரியாமல் விடும் சில தவறுகள்!
தெரிந்திருக்க வேண்டியவை!
ஒவ்வொருநாளும் சமையல் என்பது பெண்களுக்கு தலையிடிதான். அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வேலைக்குப் போவதற்கு முன்னர் குடும்பத்தில் உள்ள அத்தனைபேருக்கும் காலையுனவு, மதிய உணவு என்பவற்றை தயாரித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். இப்படியான நிலையில் சமையலை இலகுவாக்க சில உத்திகளை பெண்கள் கையாள்வதூண்டு. ஆனால் அந்த இலகுவாக்கும் செயல்கள் பல கண்ணுக்குத் தெரியாத தவறுகளையும், பாதகங்களையும் உண்டாக்கி விடுகின்றன. சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டு விடுவதோ தவறு அல்ல.அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும். ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல்வெறும் ருசிக்காகவும்,அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.
1. கழுவுவதில் கவனம் வேண்டும்
எந்த உணவு பொருளையும்கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால்,அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேக வைக்க வேண்டும். கீரையை 2 முறையாவது கழுவ வேண்டும்.இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக் கூடாது.
2. கோழிக்கறியை மறுநாள் சாப்பிட முடியுமா?
கோழி இறைச்சியை சமைக்கும் முன்பு அலசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது,கோழி இறைச்சியில் தண்ணீரை ஊற்றும் போது அதில் இருந்து தெளிக்கும் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் பாக்டீரியாக்கள் பரவும் என்பதை மறக்கக் கூடாது. மேலும், கோழி இறைச்சியை அலசி கீழே விடும் தண்ணீர் நேராக வெளியேற்றப்பட வேண்டும். அதில் ஏராளமான பக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் கவனமாக அந்த நீரை வெளியேற்ற வேண்டும்..கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள் சாப்பிடக் கூடாது.
3. அதிகம் வதக்கவோ, கருக்கவோ வேண்டாம்
எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது.எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவு பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது.
4. வெங்காயத்தை முதல் நாள் நறுக்காதீர்
காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக்கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும்.வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும குணம் உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அதுகாற்றில் இருக்கும்அனைத்து கிருமிகளையும்கவர்ந்திழுத்து வைத்துக்கொள்ளும். கிருமிகள் நிறைந்த வெங்காயத்தைத் தான் நாம் மறுநாள் உணவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர். விரத நாட்களை தவிர்த்து, சமைத்து ருசி பார்த்து விட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.

Comments
Post a Comment