வேகமாக கையை வீசி நடந்தால் தோள் மூட்டு பாதிக்குமா? - Should a shoulder knock affect the fastest hand?

வேகமாக கையை வீசி நடந்தால் தோள் மூட்டு பாதிக்குமா?



தோள்பட்டை வலி, மூட்டு வலி குறித்த சந்தேகங்களுக்கு கோவை திருச்சி ரோட்டிலுள்ள ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மைய நிர்வாக இயக்குநரும், ஆர்த்ரோஸ் கோபிக் மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.டேவிட்ராஜன்
அளித்த பதில்கள் வருமாறு:
தோள் மூட்டுகளில் வலி ஏற்பட பிரதான காரணங்கள் என்ன? மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க உணவு முறையில் மாற்றம் தேவையா?
பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால் விளையாட்டில் ஏற்படும் காயங்கள், கீழே விழுந்து அடிபடுவதால் ஏற்படும் காயங்கள், சர்க்கரை நோய், தைராய்டு போன்ற பல்வேறுகாரணங்களால் தோள் மூட்டுகளில் வலி ஏற்படுவதுண்டு. தோள் மூட்டிற்கென்று தனியாக உணவுக்கட்டுப்பாடு இல்லை. சர்க்கரை, உடல் பருமன் ஆகியவற்றிற்கு உணவுக்கட்டுப்பாடு இருந்தாலே போதும்.
பரந்த தோள்பட்டை எனக்கு உள்ளது. ஆனால் எடை தூக்கமுடிவதில்லை. நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். எடை தூக்கமுடியாமல் போவதற்கு என்ன காரணம்?
தோள்பட்டை பரந்திருந்தால் பலமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. தோள்பட்டையில் வேறு ஏதாவது பிரச்னையாகக்கூட இருக்கலாம். மருத்துவரை அணுகுவது நல்லது. தக்க உடற்பயிற்சி செய்யவது நல்லது.
முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளேன். தற்போது, தோள்பட்டையிலும் வலி தாங்கமுடிவதில்லை. என்ன காரணம்?
பொதுவாக உங்களுக்க எலும்பு முறிவு ஏற்பட்ட சமயத்தில், கையை மடக்கி தோள்பட்டையில் தொங்கவிட்டிருப்பார்கள். அது கையை அசைக்காமல் ஒரே நிலையில் எலும்பு சேரும்வரை வைத்திருக்க உதவும். அந்த சமயத்தில் கையை ஒரே நிலையில் வைத்திருந்ததால் அதைக் கழற்றியவுடன் கையை தூக்க உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். அதற்கு பயிற்சி மேற்கொண்டால் சரி செய்யலாம். மேலும் உங்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சமயத்தில் தோள்பட்டையிலும் அடிபட்டிருக்கலாம். அதை அப்பொழுது கவனிக்காமல் விட்டுவிட்டிருக்கலாம். ஆல்லது சர்க்கரை நோய் இருந்தால்கூட இந்தமாதிரியான பிரச்னை வரக்கூடும். எனவே, தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
தினமும் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தோள் பட்டையில் கடுமையான வலி இரண்டு மணி நேரம் வரை இருக்கிறது. மற்ற நேரங்களில் வலி இருப்பதில்லை. படுக்கும்போது சில சமயங்களில் கைகள் மீது தலைவைத்து படுக்கும் பழக்கம் உண்டு. இது தான் காரணமா?
முதலில் கைகள் மீது தலைவைத்து படுக்காமல் இருந்து பாருங்கள். அப்படியும் வலி இருந்ததென்றால் தோள்பட்டை மூட்டு சேருமிடத்தில் ஏற்பட்ட ரணமாக இருக்கலாம் அல்லது சரவாங்கியாக இருக்கலாம். ரத்த பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
தோள்பட்டையில் வலி ஏற்படுவதற்கும், இருதய கோளாறுக்கும் தொடர்பு உண்டா?
சம்பந்தம் உண்டு. இடது தோள்பட்டை வலி வரும்பொழுது மாரடைப்பு வருதற்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம். வலது தோள்பட்டை வலித்தால் பித்தப்பை பாதிப்பாக இருக்கலாம்.
தோள்பட்டை வலி இருந்தால் யோகா பயிற்சி செய்யும்படி என் நண்பர் கூறினார். ஆனால், வலிகுறையவில்லை. தோள்பட்டை வலி வராமல் இருப்பதற்கு எது மாதிரியான பயிற்சிகள் தேவை?
பொதுவாக யோகா உடற்பயிற்சி உடல் நலத்திற்கு சிறந்தது. உடற்பயிற்சி செய்யும்போது ஏதேனும் வலி ஏற்பட்டால் அந்த தனிப்பட்ட உடற்பயிற்சியை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. உங்களுக்கு ஏற்பட்ட வலி எதனால் வந்தது என்பதை மருத்துவ பரிசோதனையில் கண்டறிந்து பின்னர் பிஸியோதெரபி மூலம் சரி செய்யலாம்.
அதிக தூரம் பைக்கில் செல்லும் வழக்கம் உண்டு. சில சமயங்களில் மட்டும் தோள்பட்டையில் திடீரென வலி ஏற்படுகிறது
அதிக நேரம் ஒரே நிலையில் கைகளை நிலையாக வைப்பதால் தோள்பட்டை வலி ஏற்படும். சிறிது தூரம் சென்றபின் கைகளுக்கு ஓய்வளித்துவிட்டு சிறிய பயிற்சிகளை கைகளுக்கும் தோள்பட்டைக்கும் அளித்துவிட்டு பின் மீண்டும் பயணத்தை தொடங்கவும். கரடு முரடான சாலையில் செல்லும்போது வண்டியில் ஷாக் அப்சர், குஷின் சீட் ஆகியவையை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும். கையுறை மிகவும் அவசியமாக அணியவேண்டும்.
எனக்கு சில சமயங்களில் இரண்டு கைகளிலும் தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. என்ன காரணம். இதற்க ஏதெனும் சிகிச்சை தேவையா? அல்லது ஏதாவது பயிற்சி செய்தால் போதுமா?
இரண்டு தோள்பட்டையிலும் வலி இருந்தால் ஒருவேளை கழுத்தில் ஏதாவது பிரச்னைஇருக்கலாம். சிலவேளைகளில் சரவாங்கி அல்லது தைராய்டு பிரச்னையாகக்கூட இருக்கலாம். மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவ ஆலோசனையின்படி உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
காலையில் எனக்கு நடைபயிற்சி செல்லும்வழக்கம் உண்டு. பலர் வேகமாக கைகளை வீசிநடந்து செல்கின்றனர். அதை பார்க்கும்போது எனக்கும் அதேபோல் செய்யவேண்டும் என ஆசை? நடக்கும்போது கைகளை வேகமாக வீசி நடப்பதால் பாதிப்பு ஏற்படுமா?
சீராக கைகளை நன்கு வீசி நடக்கலாம். ஆனால், வேகமாக வீசி நடக்கவேண்டிய அவசியமில்லை. அவ்வாறு வேகமாக வீசி நடப்பதால் தோள் மூட்டில் பாதிப்பு வரலாம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!