காதல் தோல்விகள் ஏன்? நயன்தாரா பளிச்


சென்னை: தனது காதல் தோல்விகள் பற்றி முதல்முறையாக பேசியிருக்கிறார் நடிகை நயன்தாரா. நடிகர் சிம்பு, நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஆகியோருட னான காதல் தோல்விகளுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார். இப்போது இருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் தனது முந்தைய காதல் தோல்விகள் பற்றி நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: காதல் என்பது எப்போது வேண்டு மானாலும் வரலாம். காதலில் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். அத்துடன் மிகவும் முக்கியமான விஷயம், நம்பிக்கைதான். நம்பிக்கை இல்லை என்றால் காதல் கிடையாது. எனது காதலிலும் அதுதான் நடந்தது. நம்பிக்கை இழந்ததால் காதலையும் இழந்தேன். அதன் பிறகுதான் பிரிவு என்ற முடிவுக்கும் வந்தேன். இதையெல்லாம் கடந்து வர காலம் ஆனது. இப்போது புதிய பாதையில், புதிய மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!