Posts

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?

Image
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?   கருத்தரிக்கும் பெண்ணின் உடல் நிலை சாதாரணமாக இருக்கும்பட்சத்தில், கருவுறுதலுக்கு முன்பு, பிரத்யேகப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு, இதயநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன்பே, முழு உடல் பரிசோதனை செய்து, மருந்துகள் எடுத்துகொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்றநிலையில் வைத்துகொண்டபிறகு, கருவுறுதல் நல்லது.  இதனால் கர்ப்பகாலம்-பேறுகாலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகளை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயதுமுதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பகாலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக அவசியம்.  மாத்திரை பயன்படுத்துவோர் கூட, இன்சுலின் ஊசிக்கு மாறுவது நல்லது. நீரிழிவு மாத்திரைகளால் குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பருவ வயதில் சர்க்கரைநோய்க்கு ஆளானவர்களாக இருந்தால் ஊசி, மாத்திரை இரண்டையும் தவிர்த்துவிட்டு உணவு-உடற்பயிற்சி வாயிலாக, நீரிழிவை கட்டுக்...

பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம் | Women need calcium supplements

Image
பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்   30 வயதைத் தொட்டவர்கள் வைட்டமின் டி- கால்சியம் செறிந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் முற்றுபெறும் நிலையில் உள்ள பெண்கள் கால்சியம், அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும். மெனோபசுக்குப் பின்னர் சோயாபீன்ஸ் சேர்த்துக கொண்டால் அதிக கால்சியம் உடலுக்கு கிடைக்கும். பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால் மூட்டுப் பிரச்சனைகள் வரலாம். எலும்பின் வளர்ச்சி உறுதிப்பாட்டுக்கு சிறுவயது முதலே கால்சியம் சக்தி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பெண்கள் சிறு வயது முதலே காய்கறிகளையும், பழ வகைகளையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் தான் 30 வயதை தொடும் போது ஏற்படும் பல விதமான பிரச்சனைகளை சமாளிக்க முடியும். சிறிய வயதில் நாம் சேர்த்துக்கொள்ளும் உணவுகள் தான் வயதாகும் போது உடலுக்கு சக்தியை கொடுக்கும்.  பசுப்பாலும் பால் சார்ந்த உணவுகளும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணியாகும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவது அவசியம். கீரை வகைகள், பேரீச்சை, பா...

பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள் | 6 Signs of Childbirth

Image
பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்   பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!  * பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  * கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு ...

மார்பகப் புற்றுநோய் | Breast cancer

Image
மார்பகப் புற்றுநோய்   குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம். பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது.  இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் கேன்சர் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.  மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அழுத்தினால் கட்டிகள் இருப்ப...

மாதுளம் பழம் | Pomegranate

Image
மாதுளம் பழம் ( Pomegranate) மாதுளையில் ( Pomegranate) இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் வாந்தி, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தாகம், அதிதாகம், பித்தம், பித்தசுரம், மலட்டுத்தன்மை, உமிழ் நீர் அதிகச் சுரப்பு, விக்கல், மந்தம், செரியாமந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, பேதி, நெஞ்செரிச்சல், காதடைப்பு, மயக்கம், தீராத மயக்கம் ஆகிய அனைத்தும் நீங்கும் என்கிறது பதார்த்த குணபாடம் என்னும் பழந் தமிழர் நூல்