Posts

Today's Trending

Image
உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அந்த சிக்கல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில், உங்கள் வாழ்க்கைத் துணை என்பவர் உங்களின் கடைசி காலம் வரையிலும் உங்களுடன் இருக்கப் போகும் ஒரே நபர். உங்கள் துணையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அவர்களிடம் எப்படி பேசுவதென்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். உறவுகளுக்குள் இதுபோன்ற சிக்கல் இருப்பது இயல்பானது. பல தம்பதியர் தங்கள் துணையிடம் மன்னிப்புக் கேட்க வழிகளைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள். ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசத் தவறும் தம்பதிகள், இந்த சிக்கலை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். ஆயினும்கூட, உங்கள் தவறை நேர்மையாக ஒப்புக்கொள்வது உங்கள் துணையிடமிருந்து மன்னிப்பு கோருவதற்கான முதல் படியாகும். 'சாரி' என்பது சிறிய வார்த்தை மட்டுமே, ஆனால் அந்த வார்த்தை அதிக அர்த்தத்தைக் கொண்டுள்ளன. எனவே தவறு உங்கள் மேலிருந்தால் அதை தாராளமாக ஒப்புக்கொள்ளுங்கள். மனித உறவுகளைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் ஆழமாகவும் வெறித்தனமாகவும் அன்பை பிறரிடம் கொண்டிருக்கும்போது சண்டை/சச்சரவு என்பது எந்தவொரு உறவிலும் தவிர்க்க முடியாத ப...

உண்மையான நெருக்கம்

Image
உண்மையான நெருக்கம் என்பது உடல் ரீதியான தொடர்பைத் தாண்டி, மனம் சார்ந்த புரிதலில் தான் இருக்கிறது. ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொண்டு, அன்பால் பிணைக்கப்படும் போது தான் உறவுகள் உண்மையிலேயே வலுவடைகின்றன. ஒருவரின் உடல் அழகை விட அவர்களின் மன அழகே முக்கியம். அறிவு, எண்ணங்கள், கனவுகள், இவையே ஒருவரை உண்மையிலேயே கவர்ந்திழுக்கும் விஷயங்கள். உறவுகளில் உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காமல், அன்பையும், மரியாதையையும், புரிதலையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அப்போது தான் இருவரும் இணைந்து வாழ்க்கையில் உயரங்களை அடைய முடியும். உங்கள் வார்த்தைகளில் கண்ணைக் கவரும் ஒருவரை தேடாமல், மனதைக் கவரும் ஒருவரைத் தேடுங்கள்" - இது மிகவும் ஆழமான கருத்து. அவள் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளித்தால் உங்கள் உடல் தேவைகளுக்கு அவள் மதிப்பளிப்பாள். உணர்வில்லாமல் ஒருவளுடன் உடலால் இணைந்தால், அவள் நரகத்தை காட்டுவாள்" - உண்மையான நெருக்கம் பரஸ்பர மரியாதையிலும், புரிதலிலும் தான் இருக்கிறது என்பதை இது அழகாக விளக்குகிறது. எனது சிந்தனை தீயை அணைய விடாத ஒருவரே, என் வாழ்க்கையில் என்னை அரவணைக்க தகுதியானவர். பெண்...

சினிமாவில் இருந்து விலக நித்யா மேனன் விருப்பம்

Image
சினிமாவை விட்டு விலக விரும்புகிறேன் என்றார் நடிகை நித்யா மேனன். சிறு வயதில் இருந்தே டான்ஸ் ஆடு, பாட்டுப் பாடு, கேமரா முன்பாக வந்து நடி என எனது அம்மா என்னை வற்புறுத்துவார். ஆனால், சினிமா என்றாலே எனக்கு சுத்தமாக பிடிக்காது. சமீபத்தில், போதும் சினிமாவை விட்டு வேறு ஏதாவது பண்றேன். எனக்கு இது பிடிக்கவில்லை என்றே பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய் என சொல்லிவிட்டனர். இந்நிலையில்தான் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த விருது கிடைத்த நிலையில் தான் நம்மை சினிமா விடாது என்றும் கடவுள் நமக்குத் தரும் லஞ்சம் இது என நினைத்துக் கொண்டேன். சிறு வயதில் இருந்தே கேமரா முன்னாடி நிற்கவே பிடிக்காது. சினிமா நடிகையாக மாறியதில் இருந்து தனிப்பட்ட சுதந்திரத்தை மிஸ் செய்கிறேன். இயல்பான வாழ்க்கைக்கான ஃபீலிங் எனக்கு கிடைக்காதபோது, அது என்னை டிஸ்டர்ப் செய்துகொண்டே இருக்கும். வைல்டு லைஃப் போட்டோகிராஃபர் போல வாழ ஆசைப்பட்டேன். புகைப்படம் எடுப்பதில் எனக்கு தனி ஆர்வம் இருக்கிறது. ஆனால் சினிமாவை விட்டு விலக முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

கேளுங்கள், ஆண்களே!

Image
ஒரு பெண் குழப்பமான மனப்பான்மையை உங்களுக்கு கொடுப்பது, ​​சாக்குப்போக்குகளைக் கூறுவது, "ஓய்வு" கேட்பது, அல்லது திடீரென்று விளக்கம் இல்லாமல் தொலைவில் செல்வது  - இதையெல்லாம் ஒரு பெண் செய்தால்.... சற்று கவனம் செலுத்துங்கள். அதிகமாக சிந்திப்பதை நிறுத்துங்கள், அதிகமாக நீங்கள் போய் மன்னிப்பு கேட்பதை நிறுத்துங்கள், உங்களை தவறாக நினைப்பதை நிறுத்துங்கள். பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள், அவர்களின் நடத்தை மாறும்போது, ​​​​எப்போதும் ஒரு காரணம் இருக்கும். பெரும்பாலும், அவளுடைய கவனம், விசுவாசம் அல்லது மரியாதை வேறு இடத்திற்கு மாறியதற்கான அறிகுறிகளாகும். இதோ உண்மை: நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவளுடைய அணுகுமுறை உங்களைப் பற்றியது அல்ல, அது அவளுடைய விருப்பங்களைப் பற்றியது. அவள் ஏமாற்றியிருக்கலாம், அதைப் பரிசீலித்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறொருவர் மீது அவள் கவனம் திரும்பி இருக்கலாம். பெண்கள் எப்போதும் தங்கள் உணர்ச்சி மாற்றங்களை மறைக்க மாட்டார்கள் - அறிகுறிகள் பொதுவாக இருக்கும். கண்டுபிடிப்பது எளிது. அவற்றைக் கண்டுபிடிக்க நீங்கள் போதுமான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்...

கவிதை

Image
மனசுல இருக்குற அன்ப, வெளிக்காட்டாம மனசுக்குள்ளயே, வெச்சிருக்குது ஒரு இதயம். என்மேல, கொஞ்சம் கூட, அன்பு இல்லையானு, மனசுக்குள்ளயே கொட்டித் தீர்க்குது இன்னொரு இதயம். இதுல, வேடிக்கை என்னானா, ஒரு இதயத்துக்கு அந்த அன்ப வெளிக்காட்டத் தெரியல, இன்னொரு இதயத்துக்கு, அந்த அன்புக்கு தான் ஏங்குறேன்னு சொல்ல முடியல. காலப் போக்குள, அந்த அன்பு காணாம போயிடுது. ஆனா, ஒருத்தர் மேல ஒருத்தர், வெச்சிருந்தது உண்மையான காதல்னு, அவங்க தெரிஞ்சிக்கலாமலே பிரிஞ்சிர்றாங்க... இந்த மாதிரியான அன்ப, நீங்க மிஸ் பண்ணிடாதிங்க, உங்க அன்ப அவங்களுக்கு வெளிப்படுத்தாத பட்சத்துல அவங்களுக்கு எப்படி அது தெரியும்.. அதனால, அந்த அன்ப அவங்களுக்கு வெளிப்படுத்துங்க, ஒரு நாளும் அந்த அன்பு உங்கள விட்டுப் போகாது..