ரவா கேசரி

ரவா கேசரி

1558085397 7552

 தேவையான பொருட்கள்:

ரவை – ஒரு டம்பளர்

சர்க்கரை – 2 டம்பளர்

தண்ணீர் – ஒன்றரை டம்பளர்

நெய் – அரை டம்பளர்

முந்திரிப் பருப்பு- 10

ஏலக்காய் – 4

கேசரி பவுடர் – ஒரு தேக்கரண்டி

பன்னீர் – 2 தேக்கரண்டி


செய்முறை:

முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். அதேநெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும். ரவை நன்றாக வெந்ததும்,சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும், பன்னீரையும் சேர்க்கவும்.

உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச்சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும்.

Comments

Popular posts from this blog

இரு பொக்கிஷம்

தினமும் உடலுறவு.. கோடி நன்மைகள் இருக்கு ஓகே.. ஆனால் அந்த 2 பிரச்சனையும் இருக்கே!

செட்டிநாடு சிக்கன் குழம்பு