Posts

Showing posts from March, 2016

நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்

Image
மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான். மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன். “அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான். உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான். அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலி...

சமுகத்தின் இன்றைய நிலை

What a Message, Worth Reading இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்.... உண்மை தான் என்றோம். இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது... ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது...

மகிழ்ச்சியான தருணங்கள்

 ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....  ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். ☺ மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!  கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.  மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.   வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.   தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .  கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.   காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.  நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.  10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை...

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது

 ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு சகோதரிகளுக்காக, இனிப்புகளை  தியாகம் செய்பவன் பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை  தியாகம் செய்பவன் காதலிக்கு  பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன் மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன் எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன் இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன் அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன் அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம் வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம் குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம் மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம் தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால்...

கல்லூரி நினைவுகள்

படிக்க பத்து நிமிடம் ஒதுக்குங்கள்...!!! பரிசளிக்கிறேன் பற்பல நினைவுகளை...!!! அழுகையுடன் வந்த என்னை அழுகையுடனே வழியனுப்புகிறது!!! வரப் பிடிக்காமல் வந்த எங்களை ஏனோ திரும்ப போக மனமில்லாமல் ஆக்கிவிட்டது!!! எத்தனை சந்தோசங்கள்! எத்தனை துன்பங்கள்!! ஒரே நாளில் எங்களை கதாசிரியர்களாக்கியது தேர்வு நாள்... ஆவலுடன் அரட்டையடிக்கும் தேர்வு நாட்கள்!! விழிகளுக்கு விடை கொடுக்காத இரவு நேர குழு படிப்பு!! அதிலும் தவறாத அன்றாட இரவு நேர அலங்காரங்கள்!! தேர்வு நாள் மட்டுமே சூரியனை தட்டி எழுப்பினோம்!! சூரியன் சுட்டெரித்தாலும் எழாத கல்லூரி வேலை நாட்கள்!! விடுமுறையை எதிர்பார்த்த தேர்வு நாட்கள்!! விடுமுறையை வெறுத்த கல்லூரி விடுமுறை நாட்கள்... நான்கு ஆண்டுகளில் நாங்கள் கண்ட விழாக்கள்!!! நாற்பது ஆண்டுகள் ஆனாலும் திரும்ப கிடைக்காதா??என ஏங்க வைக்கும்!! என் தட்டில ஏன் சாப்டனு வீட்ல சண்ட போட்ட நாம!! ஒரே தட்டுல உணவுண்ட உன்னதமான தருணங்கள்!!! நமது பிறந்தநாளை தமது பிறந்தநாளாக கொண்டாடிய நண்பர் கூட்டம்!! வகுப்பறை சுவாரசியங்களை பகிர்ந்த அந்த தருணங்கள்!! நடிக்காதவர்களுக்கும் நடிக்கத் தோன்று...

படித்ததில் மனதில் பதிந்தது

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. “கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு காப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” “கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். “ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் ...

படித்ததில் பிடித்தது

படித்து நீங்கள் கண்களை கசக்கவில்லை என்றால்... கல் மனதே... நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையை தேடி அமர்ந்தேன். என் மூட்டைகளை மேலே இருத்தி, சுற்றும் பார்த்துக்கொண்டு , கடக்க வேண்டிய மூன்று மணி நேரத்திற்கு, கையில் படிக்க புத்தகம் இருக்கிறது என்ற திருப்தியுடன் அமர்ந்தேன்.. விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..  நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.. எந்த எல்லைக்கு பணி நிமித்தாமாக செல்கிறீர்கள்..? ஆக்ராவுக்கு. அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின், எங்கோ பாதுகாப்பு பணி ... அவர்கள் எல்லாரும் ஜாலியாக அரட்டை அடிக்க, நான் பாதி கேட்டுக்கொண்டு, பாதி நான் கொண்டு வந்த புத்தகம் படித்துக்கொண்டு... ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு.. மதிய உணவு தயார்.. இப்பொழுதெல்லாம் காசு கொடுத்துதான் உண்ண வேண்டும் விமானத்திலும். நிறைய நேரமாகும் போய் இறங்க. சரி! உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க நிற்க... பின்னால் ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்.. நீ சாப்பாடு வாங்கலையா? இல்லை ..வ...

தெரிந்து கொள்ளுங்கள்

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை... நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்... நகை பணம் சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது... புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்... உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை... வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்... தாய் தந்தை இளமை 7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு... தாய் தந்தை குரு நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி- 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செல்வத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு விஷயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் ...

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை... கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை... எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்... இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை... ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை... ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்ப...

படித்ததில் பிடித்தது

பெண்!!! ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார். “இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது...