படித்ததில் பிடித்தது

படித்து நீங்கள் கண்களை கசக்கவில்லை என்றால்... கல் மனதே...
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையை தேடி அமர்ந்தேன். என் மூட்டைகளை மேலே இருத்தி, சுற்றும் பார்த்துக்கொண்டு , கடக்க வேண்டிய மூன்று மணி நேரத்திற்கு, கையில் படிக்க புத்தகம் இருக்கிறது என்ற திருப்தியுடன் அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..  நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
எந்த எல்லைக்கு பணி நிமித்தாமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு. அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின், எங்கோ பாதுகாப்பு பணி ...
அவர்கள் எல்லாரும் ஜாலியாக அரட்டை அடிக்க, நான் பாதி கேட்டுக்கொண்டு, பாதி நான் கொண்டு வந்த புத்தகம் படித்துக்கொண்டு...
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு.. மதிய உணவு தயார்.. இப்பொழுதெல்லாம் காசு கொடுத்துதான் உண்ண வேண்டும் விமானத்திலும். நிறைய நேரமாகும் போய் இறங்க. சரி! உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க நிற்க...
பின்னால் ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்.. நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்.. என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டில்லி..அங்கு இறங்கி உண்ணலாம்.. இவ்வளவு செலவு கிடையாது..
ஆமாம்.உண்மை!
என்னால் இதை கேட்ட பொழுது.... மனம் வலித்தது.. விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..
பதினைந்து உணவு பொட்டலம் தாங்கி அவள் வந்து என் அருகில் நின்றாள்..
உங்களுக்கு என்ன மிகவும் பிடிக்கும்? வெஜ் இல்லை சிக்கன் ? என்று கேட்டாள்..
நான் வெஜ்....ஒ சிக்கனா..இல்லை இல்லை நான் ...வெஜ் என்றேன்..
அவள் பிஸினஸ் க்ளாஸ் சென்று ஒரு பெரிய வெஜ் மீல்ஸ் பாக்கெட்ட் எடுத்து வந்து என்னிடம் கொடுத்து சிரித்தாள்...
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..
சற்று நேரத்தில் விமான கேப்டன் வெளியில் வந்தார்.. அவர் என்னை நோக்கி வருவது போல தோன்றியது.. நான் நினைத்தது சரிதான்.. என்னிடம் வந்து , என் கைகளை பிடித்து குலுக்கி , நான் ஏர் போர்ஸ் பைலட்டாக இருந்தேன்..ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்..உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது..என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..
விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...
இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்.. பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்.. அனைத்து கரன்ஸிகளை அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..
காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி.. இந்த மன நிலையில் செய்யபடும் ப்ரார்த்தனை பலிக்கும்.. அவர்களின், பாதுகாப்பாக திரும்பி வீடு செல்ல, அரங்கனை ப்ரார்த்தித்துக்கொண்டேன்..
இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு நமக்கு எவ்வளவு தருகிறார்கள்.. உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது வெறும் துச்சமே...
ஒவ்வொரு இராணுவ வீரனும் ஒரு நிலையில் தன் நாட்டிற்க்காக கொடுக்கும் காசோலையில் " payable india"  எழுதப்படும் தொகை " இருக்கும் அல்லது வாழும் வரை என் வாழ்வு " இந்த தொகையை அவன் பாரதத்தாயிற்கு கொடுக்கும் உத்தம குடிமகன்..
இது அவன் செய்யும் பெரும் தியாகம்.. அதற்கு நாம் என்ன செய்கிறோம்.. இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது...

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!