கல்லூரி நினைவுகள்

படிக்க பத்து நிமிடம் ஒதுக்குங்கள்...!!!
பரிசளிக்கிறேன் பற்பல நினைவுகளை...!!!
அழுகையுடன் வந்த என்னை அழுகையுடனே வழியனுப்புகிறது!!!
வரப் பிடிக்காமல் வந்த எங்களை ஏனோ திரும்ப போக மனமில்லாமல் ஆக்கிவிட்டது!!!
எத்தனை சந்தோசங்கள்!
எத்தனை துன்பங்கள்!!
ஒரே நாளில் எங்களை கதாசிரியர்களாக்கியது தேர்வு நாள்...
ஆவலுடன் அரட்டையடிக்கும் தேர்வு நாட்கள்!!
விழிகளுக்கு விடை கொடுக்காத இரவு நேர குழு படிப்பு!!
அதிலும் தவறாத அன்றாட இரவு நேர அலங்காரங்கள்!!
தேர்வு நாள் மட்டுமே சூரியனை தட்டி எழுப்பினோம்!!
சூரியன் சுட்டெரித்தாலும் எழாத கல்லூரி வேலை நாட்கள்!!
விடுமுறையை எதிர்பார்த்த தேர்வு நாட்கள்!!
விடுமுறையை வெறுத்த கல்லூரி விடுமுறை நாட்கள்...
நான்கு ஆண்டுகளில் நாங்கள் கண்ட விழாக்கள்!!!
நாற்பது ஆண்டுகள் ஆனாலும் திரும்ப கிடைக்காதா??என ஏங்க வைக்கும்!!
என் தட்டில ஏன் சாப்டனு வீட்ல சண்ட போட்ட நாம!!
ஒரே தட்டுல உணவுண்ட உன்னதமான தருணங்கள்!!!
நமது பிறந்தநாளை தமது பிறந்தநாளாக கொண்டாடிய நண்பர் கூட்டம்!!
வகுப்பறை சுவாரசியங்களை பகிர்ந்த அந்த தருணங்கள்!!
நடிக்காதவர்களுக்கும் நடிக்கத் தோன்றும்!!!
ஆம் அன்பானவர்களின் அக்கரையைக் கண்டு!!
காய்ச்சல் வந்தது என்னவோ நமக்காக இருக்கலாம்!!
பதற்றத்தில் கொதிக்கிறது நண்பரின் உடல்!!
நூலகமே செல்லாத நாங்கள்
நூலக வாசலை மிதிக்காத நாளில்லை...இறுதி ஆண்டில்!!
புத்தாடை அணிந்தால்
புத்தாண்டு என்றால்!!
விடுதி மாணவர்களுக்கோ
தினமும் புத்தாண்டுதான்!!
ஏனென்றால் ஆடை மாற்று முறையை உருவாக்கியவர்களே நாங்கள்தான்!!♡
உண்பது அரைகுறை உணவென்றாலும்....
விடுதி உணவை குறை சொல்லாவிட்டால்...
அன்று தூக்கம் போய்விடும்...!
கல்லூரியில் அமர்ந்து பள்ளித் தருணங்களைப் பேசிய நாட்கள்!..
ஆனால் ஏனோ
கல்லூரித் தருணங்களைப் பகிர்ந்து கொள்ள அருகில் நண்பர்கள் இல்லா நாட்கள்!!
இனி அரட்டையடிக்க அருகில் ஆள் இல்லை!!
இனி இரவு நேர கேளிக்கைகள் இல்லை!!
இனி மணி அடித்தால் சாப்பாடு இல்லை!!
இனி அரக்க பறக்க செல்லும் கல்லூரி நாட்கள் இல்லை!!
மாதாவாரியாக விடுமுறை நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருந்த கைகள் இன்று ஏனொ!!!
கல்லூரி இறுதி ஆண்டு நிறைவடையப் போகும் நாட்களை தானே கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது♡
காணுகின்ற இக்கல்லூரி நாட்கள் காணல் நீரைப்போல் காணாமல் போகும் ஓர் நாள்!!
ஆனால் வாழுகின்ற இந்த வாழ்வின் நினைவுகள்..கண்களின் நீரைப்போல் காயாமல் வழிந்தோடும் நம் மனதில்..♡
பல நாட்களுக்குப் பின்...பழகிய முகத்தைப் பார்த்தவுடன்...
பளிச்சிடும் சந்தோசம் தோன்றும்..
பற்பல சிந்தனைகளுக்குப் பிறகு...
பற்பல நினைவுகளுக்குப் பிறகு...
பார்த்து பதிந்த நண்பரின் முகத்தை அடையாளம் காண்போம்!!
அந்த நிமிடம்!!!...
கல்லூரி சென்ற முதல் நாள்...
பழகிய தருணங்கள்...
சிரித்த சில நிமிடங்கள்..ஆறுதலுடன் அழுத பல நாட்கள்..
காரணமில்லாச் சண்டைகள்...
பசியாறிய பலவகை கட்டுச் சோறுகள்..
இப்படி நான்கு ஆண்டு நினைவுகளை மறுபடியும் வாழும் சந்தோசம்!!♡
மனசும் கலங்குகிறது காலாவதியாகப் போகும் அடையாள அட்டையைக் காணும்போது!!
கலங்கி நிற்கிறோம்!!
களம் விட்டு செல்ல மனமில்லாமல்!!!
பருவக் காலம் முடிந்து திரும்பும் பறவைக்குக் கூட அடுத்த பருவக் காலம் உண்டு!!
ஆனால் நான்கு ஆண்டுகள் முடிந்து திரும்பும் எங்களுக்கோ!!
சுகமான நினைவுகளே மிச்சம்!!
நாட்கள் நகரலாம் வருடங்கள் பல ஆகலாம்
கல்லூரி வடிவமைப்புகள் மாறலாம்..
ஏன் நாம் ஒவ்வொருவரின் உருவத்திலும் கூட மாற்றம் ஏற்படலாம்!!!
ஆனால் இவ்வாழ்வு உள்ளவரை நிலைத்து நிற்கும் இக்கல்லூரியின் சுகமான நினைவுகள்!!!
நினைவுகள் நிரம்பிய கனத்த இதயங்களுடன் தள்ளாடுகிறோம்!!
மீளா விடை கொடுக்கப் போகிறாயா!!
செல்கிறோம்....
தனியாக அல்ல!!
உன் ஒட்டுமொத்த நினைவுகளோடு...
---நினைவுகளின் சரனாலயமே நீதானே---
என் கல்லூரித் தாயே!!
கல்லூரி நினைவுகளோடு திரும்பும் என்னை போன்ற ஒவ்வொரு கனத்த இதயங்களுக்கும் இது சமர்ப்பணம்!!!

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!