Posts

Showing posts from March, 2020

சீனாவை தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்

Image
மும்பை: சீனாவை தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகளவில்  கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி-4,825, சீனா 3,255, ஈரான்-1,566, ஸ்பெயின்-1,378, பிரான்ஸ்-562,  அமெரிக்கா-324. இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில், கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் 60 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். தொடர்ந்து, பீகார் மாநிலம் பாட்னாவில் 38 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.  தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து சென்...

#அன்பு#பாசம்

Image
வேண்டும் தருணங்களில் எல்லாம்  ப்ரியமானவரின் குரல் கேட்க  கிடைப்பவர்கள் வரம் பெற்றவர்கள்❤

கொரோனா எதிரொலி: 5 கிலோ கோழி இறைச்சி ரூ.100க்கு விற்பனை!

Image
கொரோனா எதிரொலி: 5 கிலோ கோழி இறைச்சி ரூ.100க்கு விற்பனை! கொரோனா குறித்த வதந்தியால் ஏற்றம் காணாத கோழி இறைச்சியின் விலையால் வியாபாரிகள் சோகமடைந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தமிழகத்தில் பேச தொடங்கியதில்  இருந்து கோழி இறைச்சி மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல், கோழி இறைச்சியின் மூலம் தான் என்று கிளம்பிய வதந்தியை அடுத்து, கோழி இறைச்சி மீதான மோகம் குறைந்து வருகிறது. கோழியின் மூலம் கொரோனா பரவல் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், சென்னையில் பொது மக்களுக்கு இலவசமாக சிக்கன்  வழங்கும் சுவாரசியமான நிகழ்வெல்லாம் அரங்கேறியது.  இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 5 கிலோ கோழி இறைச்சி, ரூ.100க்கு விற்றும் வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது வியாபாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து கோழி இறச்சி விற்பனை கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் 8 ஆண்டுகளில் இல்லாத அளவில், முட்டையின் விலையும் சரிந்துள்ளது.

அனுபவம்😔

Image
அனுபவங்களை அதிகம் கண்டபின் தான் தெரிகிறது  அன்பானவர்களை விட இங்கு ஆபத்தானவர்களே அதிகம் என்று....

தமிழ் கவிதைகள்

Image
கடவுளை அழைத்தேன் காட்சித் தரவில்லை.. அன்பே உன்னை  நினைத்தேன் கண்ணெதிரே தோன்றினார் காலமெல்லாம் துணையாக இருக்கா.. 💕