சீனாவை தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்
மும்பை: சீனாவை தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி-4,825, சீனா 3,255, ஈரான்-1,566, ஸ்பெயின்-1,378, பிரான்ஸ்-562, அமெரிக்கா-324.
இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் 60 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். தொடர்ந்து, பீகார் மாநிலம் பாட்னாவில் 38 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர், தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment