உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்!

 

உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்!

இந்தியா மனித இனத்தின் தொட்டில், மனித பேச்சுக்களின் பிறப்பிடம், வரலாற்றின் தாய், புராணக்கதைகளின் பாட்டி. மனித வரலாற்றில் நமது மிக மதிப்புமிக்க பொக்கிஷமாக இந்தியா உள்ளது.

உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்!

இந்த வார்த்தைகள் எல்லாம் மார்க் ட்வைன் என்பவர் கூறிய வார்த்தைகள் ஆகும். அப்படியாக உலக நாடுகள் இந்தியாவை மிகவும் தொன்மை வாய்ந்த தேசமாக பார்க்கின்றன. இந்தியா குறித்த கதைகளே ஐரோப்பியர்களுக்கு இந்தியா மீது அதிக மோகத்தை ஏற்படுத்தியது. அப்படி பட்ட நம் தேசத்தில் சுவாரஸ்யமான சில உண்மைகளை இப்போது பார்ப்போம்.

01.மிதக்கும் தபால் நிலையம்

1,55,015 க்கும் அதிகமான தபால் நிலையங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய தபால் வலையமைப்பை கொண்ட தேசமாக இந்தியா உள்ளது. அதன்படி பார்த்தால் சராசரியாக ஒரு தபால் நிலையம் 7,175 மக்களுக்கு சேவை செய்கிறது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் ஒரு மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.

02.கும்ப மேளா கூட்டத்தை விண்வெளியில் இருந்து பார்க்கலாம்.

கும்ப மேளா என்பது இந்திய ஆன்மீக பண்டிகைகளில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 75 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்களை கொண்ட மிகப்பெரிய கூட்டம் பங்கேற்றது. இந்த கூட்டம் மிக பெரியதாக இருந்ததால். விண்வெளியில் உள்ள சாட்லைட் மூலம் கூட இந்த கூட்டத்தை காண முடிந்தது.

03.உலகில் மக்கள் வசிக்கும் ஈரப்பதமான இடம்

இந்தியாவில் மேகாலயாவில் உள்ள காசி மலைப்பகுதியில் உள்ள மவ்ஸின்ராம் என்ற கிராமமானது உலகிலேயே அதிக சராசரி அளவில் மழையை பெறும் கிராமமாக உள்ளது. மேகாலாயாவின் மற்றொரு பகுதியான செரபுஞ்சி 1861 ஆம் ஆண்டின் படி அதிக மழை பெய்த பகுதிக்கான சாதனையை படைத்தது.

04.பூமியின் சுற்றளவு அளவிற்கு கம்பிகளை கொண்ட பாந்த்ரா வொர்லி சீலிங்

பாந்த்ரா வொர்லி சீலிங் என்பது மும்பையில் உள்ள மிகப்பெரிய பாலமாகும். இது இந்தியாவின் சிறந்த கட்டிட கலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பாலம் கட்டி முடிக்க மொத்தம் 2,57,00,000 மணி நேரங்கள் ஆகின. இந்த பாலத்தில் உள்ள கம்பிகளின் நீளமானது நமது பூமியின் சுற்றளவு அளவிற்கு இருக்குமாம். மேலும் இந்த பாலம் 50,000 ஆப்பிரிக்க யானைகளின் எடையை கொண்டதாம். இது ஒரு உண்மையான பொறியியல் மற்றும் கட்டிட கலை அற்புதமாக பார்க்கப்படுகிறது.

05.உலகின் மிக உயர்ந்த கிரிக்கெட் மைதானம்

2,444 மீட்டர் உயரத்தில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள செயில் நகரில் உள்ளது இந்த செயில் கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானமாக பார்க்கப்படுகிறது. இது 1893 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இது செயில் ராணுவ பள்ளியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

06.ஷாம்பு என்கிற வார்த்தை இந்தியாவில் இருந்து உருவானது


ஷாம்பு வானது இந்தியாவில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. வணிக ரீதியாக தற்போது விற்கப்படும் ஷாம்புகள் அல்ல. இந்தியர்கள் மூலிகைகளை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு ஷம்பு என பெயர் வைத்துள்ளனர். அதுவே பிறகு ஷாம்பு என ஆனது. ஷம்பு என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். அதற்கு மசாஜ் செய்வது என பொருளாகும்.

07.இந்திய தேசிய கபடி அணியானது அனைத்து உலக கோப்பைகளையும் வென்றுள்ளது

இதுவரை உலக அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான அனைத்து 5 கபடி உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. அதே போல இதுவரை நடந்த அனைத்து இந்திய மகளிர்களுக்கான கபடி உலக கோப்பையிலும் இந்திய மகளிர் அணியே வென்றுள்ளது.

08.நிலவில் நீர் இருப்பதை கண்டுப்பிடித்த நாடு இந்தியா

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் இருந்து நிலவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரோ சந்திராயன் 1 எனும் விண்கலம் அதில் உள்ள மினரலஜி மேப்பரை பயன்படுத்தி சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதன் முதலாக கண்டுப்பிடித்தது. எனவே சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதன் முதலாக கண்டுப்பிடித்த பெருமை இந்தியாவிற்கு கிடைத்தது.

09.சுவிட்சர்லாந்தில் அறிவியல் நாள் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு அர்பணிக்கப்பட்டது

இந்தியாவின் ஏவுகணை திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 2006 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்தார். அவர் வந்து சென்ற பிறகு சுவிட்சர்லாந்து அவர் வந்து சென்ற தினமான மே 26 ஐ சுவிட்சர்லாந்தின் அறிவியல் தினமாக அறிவித்தது.

10.இந்தியாவின் முதல் ஜனாதிபதி தனது சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார்

டாக்டர் ராஜேந்திர பிரசாத் என்பவர்தான் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அளித்த சம்பளத்தில் அவர் 50 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார். அதற்கு மேல் தனக்கு சம்பளம் தேவையில்லை என அவர் கூறிவிட்டார். அவரது 12 ஆண்டு பதவிக்காலத்தின் முடிவில் அவர் தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார். அந்த காலக்கட்டத்தில் ஒரு ஜனாதிபதிக்கான சம்பளம் 10,000 ரூபாய் ஆகும்.

11.இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது

இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட முதல் ராக்கெட்டானது மிகவும் இலகுவாகவும் சிறியதாகவும் இருந்தது. எனவே அது சைக்கிள் மூலம் கேராளாவில் உள்ள திருவனந்த புரத்தில் உள்ள தும்பா ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

12.இந்தியாவில் யானைகளுக்கு ஸ்பா உள்ளது

இந்தியா பல விஷயங்களுக்காக பிரசத்தி பெற்ற இடமாக உள்ளது. கேரளாவில் உள்ள புன்னத்தூர் கோட்டா யானை புத்துணர்ச்சி மையத்தில் யானைகளுக்கு குளியல், மசாஜ் மற்றும் உணவுகள் வழங்கப்படுகின்றன. இது நாட்டின் பெரிய வளர்ச்சி படியாக பார்க்கப்படுகிறது.

13.உலகிலேயே அதிகம் ஆங்கிலம் பேசும் இரண்டாவது நாடு இந்தியா

அதிகம் ஆங்கிலம் பேசும் மக்களை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 125 மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். இது மொத்த இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யாருக்கு தெரியும். உலகிலேயே அதிகம் ஆங்கிலம் பேசும் மக்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடத்திற்கு கூட வரலாம்.

14.உலகில் அதிகமான சைவ உணவு உண்பவர்களை கொண்ட நாடு

இந்தியா உலகிலேயே அதிகம் சைவ உணவை உண்பவர்களை கொண்ட நாடாக உள்ளது. இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் சைவமாக இருக்க மத காரணங்கள் அல்லது தனிப்பட்ட தேர்வுகள். இவை இரண்டில் ஒன்றுதான் காரணமாக உள்ளன. இந்திய மக்கள் தொகையில் சுமார் 20 முதல் 40 சதவீத மக்கள் சைவ உணவு உண்பவர்களாக உள்ளனர். இதனால் உலகின் மிகப்பெரும் சைவ நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.

15.உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியை கொண்ட நாடு

உலகில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக ஐரோப்பாதான் முதலில் இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்தியா ஐரோப்பாவை முந்தியது. 2014 ஆம் ஆண்டு இதன் உற்பத்தி 132.4 மீ டன்களை மிஞ்சியது.

16.சர்க்கரை உண்ட முதல் நாடு இந்தியா

சர்க்கரையை பிரித்தெடுத்தல் மற்றும் அதன் சுத்திகரிப்பு நுட்பங்களை உருவாக்கி முதன் முதலில் சர்க்கரையை பிரித்தெடுத்த நாடு இந்தியா. அதன் பிறகே வெளிநாட்டினர் இந்தியாவிடம் இருந்து சர்க்கரை சுத்திகரிப்பை கற்றுக்கொண்டனர்.

17.மனித கால்குலேட்டர்

மனித கால்குலேட்டர் என்ற பெயரே வித்தியாசமாக தோன்றலாம். அப்படி ஒரு பெயரை பெற்ற பெண்மணிதான் இந்தியாவை சேர்ந்த சகுந்தலா தேவி. இவர் 13 இலக்க எண்களை கணக்கீடு செய்து விடை கூறிய பின்பு இவருக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது. அவரிடம் 7,686,369,774,870* 2,465,099,745,779 இந்த இரண்டு எண்களின் பெருக்கல் மதிப்பு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கான சரியான விடையை அவர் 28 வினாடிகளுக்குள் கூறினார். உண்மையிலேயே சகுந்தலா தேவி மனித கால்குலேட்டர்தான்.

18.ரவீந்திரநாத் தாகூர் தான் வங்காள தேசத்தின் தேசிய கீதத்தையும் எழுதினார்


இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை எழுதியவர்தான் ரவீந்திரநாத் தாகூர். இது மட்டுமின்றி வங்காள தேசத்தின் தேசிய கீதமான அமர் சோனார் என்ற பாடலையும் இவரே இயற்றியுள்ளார். ஆங்கிலேயர்கள் அவருக்கு நைட் ஹூட் என்ற பட்டத்தை வழங்கினர். ஆனால் ஆங்கிலேயர்கள் நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை காரணமாக ரவீந்திராநாத் தாகூர் அந்த மரியாதையை மறுத்துவிட்டார்.

19.தயான் சந்திற்கு ஜெர்மன் குடியுரிமை வழங்கப்பட்டது

யார் இந்த தியான் சந்த். இந்தியாவை சேர்ந்த ஹாக்கி வீரர்தான் தியான் சந்த். 1936 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் ஜெர்மனியை 8-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தார். அதன் பிறகு அவருக்கு அப்போதைய ஜெர்மனியின் அதிபரான ஹிட்லரிடம் இருந்து அழைப்பு கிடைத்தது. ஹிட்லர் தியான் சந்தை ஜெர்மனிக்காக விளையாட சொல்லி கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலாக ஜெர்மனியில் குடியுரிமை, ஜெர்மானிய இராணுவத்தில் உயர் பதவி ஆகியவை வழங்குவதாக அவர் கூறினார். ஆனால் தியான் சந்த் அவற்றை மறுத்து விட்டார்.

20.ஃப்ரெடி மெர்குரி மற்றும் பென் கிங்ஸ்லி இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்

குயின் என்ற ராக் இசைக்குழுவின் புகழ்ப்பெற்ற பாடகரான ஃப்ரெடி மெர்குரி உண்மையில் இந்தியாவை சேர்ந்தவர். இவை ஃபரோக் புல்சரா என்னும் பெயரில் ஒரு பார்சியாக பிறந்தார். அதே போல பிரபல ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான பென் கிங்க்ஸ்லியும் இந்தியாவை சேர்ந்தவர். இவரது இயற் பெயர் கிருஷ்ணா பண்டிட் பஞ்சி ஆகும். உலக புகழ் பெற்ற காந்தி திரைப்படத்தில் இவரே மகாத்மா காந்தியாக நடித்தார்.

21.இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா விண்வெளியில் இருந்து சாரே ஜஹான் சே அச்சா பாடலை பாடினார்

இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு சென்ற போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவரிடம் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது என்று கேட்டார். அதற்கு ராகேஷ் ஷர்மா “சாரே ஜஹான் சே அச்சா” என்ற தேசப்பக்தி பாடலை பாடினார்.

22.இந்திய நிறுவனமான ஹேவல்ஸ்க்கு அதன் முதல் உரிமையாளர் பெயர் வைக்கப்பட்டது

நீண்ட காலத்திற்கு முன்பு 10 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு இந்திய நிறுவனம் ஹெவல்ஸ். தற்சமயம் இது பல மில்லியன் மின்சார பொருட்களை விற்கும் நிறுவனமாக உள்ளது. இதன் அசல் உரிமையாளரான ஹவேலி ராம் குப்தாவின் பெயரை வைத்தே இந்த நிறுவனத்திற்கு பெயர் வைக்கப்பட்டது.

23.வைரங்கள் முதன் முதலில் இந்தியாவில் தான் வெட்டப்பட்டன


ஆரம்பத்தில் கிருஷ்ணா நதி டெல்டா பகுதியில் உள்ள குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வண்டல் வைப்புகளில் மட்டுமே வைரங்கள் காணப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் வைரங்கள் கிடைக்கும் வரை இந்தியாவே உலகம் முழுவதும் வைர உற்பத்தியை செய்து வந்தது.

24.கிர் வனத்தின் நடுவில் தனி வாக்காளருக்கு சிறப்பு வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வாக்காளருக்கு மட்டும் வாக்குச்சாவடி அமைத்த நாட்டை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா. அந்த நாடு நமது இந்தியாதான். மஹந்த் பரதாஸ் தர்ஷந்தாஸ் என்பவர் 2004 ஆம் ஆண்டு முதல் வாக்களித்து வருகிறார். ஆனால் அவர் கிர் காட்டில் உள்ள பனேஜில் இருக்கிறார். அங்கு உள்ள ஒரே ஒரு வாக்காளர் இவர் என்பதால் பிரத்யேகமாக இவருக்கு மட்டும் சிறப்பு வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

25.பாம்புகள் மற்றும் ஏணிகள் விளையாட்டு இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் மோட்ச படாமு என்று அழைக்கப்பட்ட இந்த விளையாட்டு குழந்தைகளுக்கு கர்மா பற்றி கற்றுக்கொடுக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்சமயம் இது உலகம் முழுவதும் பிரபலமான ஒரு பலகை விளையாட்டாக மாறியுள்ளது.

இப்படியாக இந்தியாவின் பெருமையை பறைச்சாற்றும் பல விஷயங்கள் உள்ளன. இதனால் உலகளாவிய பார்வையில் சிறப்பு வாய்ந்த நாடாக இந்தியா உள்ளது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!