வாழ்க்கை துணையிடம் எந்த மாதிரி எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது

 

வாழ்க்கை துணையிடம் எந்த மாதிரி எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது?...


எதிர்பார்ப்புகள் என்பது எல்லா மனிதர்களிடமும் உள்ள விஷயம். ஆனால் இதன் அளவை பொருத்து தான் இதை நல்லதா கெட்டதா என்பதை நாம் முடிவு செய்ய முடியும். இதன் அளவு அதிகமாகும் போது தான் உறவுக்குள் பல சிக்கல்கள் உண்டாகிறது. இந்த சிக்கல்கள் உங்க வாழ்க்கையை இருளச் செய்து விடும். நீங்கள் உங்க வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து பார்க்கலாம். ஆனால் அவை எல்லாம் நடக்குமா என்பது நிஜ வாழ்க்கையில் கேள்வி. எனவே உங்க துணை பற்றிய நம்ப முடியாத எதிர்ப்பார்ப்புகளை நீங்கள் கொண்டிருந்தால் நீங்கள் ஏமாற நிறைய வாய்ப்பு உள்ளது. 

எனவே ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் முன்பு எந்த மாதிரியான எதிர்ப்பார்ப்புகளை விட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

​மிகவும் பொருத்தமான ஒரு நபரை தேடாதீர்கள்

100% பொருத்தமான நபர் என்றும் யாரும் கிடையாது. எனவே நீங்கள் கற்பனை செய்த மாதிரி இருக்கும் நபரை தேடுவதை நிறுத்துங்கள். ஒரு துணை கொண்டிருக்க வேண்டிய குணநலன்கள் அன்பு, மரியாதை மற்றும் புரிதல் மட்டுமே. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணையை மற்றவருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். சிலரை வெளிப்படையாக பார்க்கும் போது உங்களுக்கு பிடித்த நபராக தோன்றலாம். ஆனால் மூடிய கதவுகளில் என்ன நடக்கிறது என்பது எப்படித் தெரியும். எனவே நீங்கள் எதிர்பார்த்த எல்லா குணநலன்கள் இல்லாவிட்டாலும் ஒரு சில குணநலன்கள் இருந்தால் போதும். 

​உங்க பிரச்சினைகளை தீர்க்க மட்டும் துணை கிடையாது

ஒரு உறவு என்பது உங்களைப் புதுப்பித்து, உங்களை உயிருடன் உணரவைக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகள் மற்றும் கவலைகள் அனைத்தையும் அவர் காட்டும் அன்பு மறக்கச் செய்ய வேண்டும். அதற்காக உங்க துணையே எல்லா பிரச்சினையும் தீர்ப்பார் என்பது நம்பத்தகாது. உங்க பிரச்சினை உங்க பொறுப்பு தான். அவருடைய பொறுப்பு அல்ல. அவர் உங்களுக்கு உணர்ச்சி பூர்வமான ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் உங்க பொறுப்பை நீங்கள் தான் ஏற்க வேண்டும்.

​ஒரு உறவுக்குள் தியாகங்கள் தேவையில்லை

சமரசமும் தியாகங்களும் ஒரு உறவில் கைகோர்த்துச் செல்வது நல்லது என்று கூறப்படுகிறது . ஆனால் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியாத ஒரு உறவில் இருப்பது தவறு. எல்லாவற்றையும் தியாகம் செய்வது உங்க வாழ்க்கையை ருசிக்க வைக்காது. உங்க துணைக்கும் தனிப்பட்ட விருப்பங்களும் தேவைகளும் இருக்கும். அதற்காக உங்க விருப்பங்களை நீங்கள் தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஒரு உறவு என்பது எப்போதும் சீரான விகிதத்தில் செயல்பட வேண்டும்.


​கனவுகளை நிறைவேற்றுதல்

உறவுகள் உங்க கனவுகளை தொலைதூரத்திற்கு அழைத்துச் செல்வதில்லை

படங்களில் வருவது போன்று திருமண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ இருக்காது. எனவே உங்களுக்கு பிடித்த காதல் திரைப்படத்தில் வரும் ஜோடிகளைப் போன்று உங்க காதல் வாழ்க்கையை ஒப்பிட்டால் உங்க நிஜ வாழ்க்கை கீழ்நோக்கி தான் செல்லும். எனவே நிஜ வாழ்க்கையில் ஒப்பிட்டு நடப்பது உங்களுக்கு பேரழிவு தரும். எனவே அந்த மாதிரியான எதிர்ப்பார்ப்புகள் இருந்தால் தவிருங்கள்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!