திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சரியா வரலியா? அலட்சியமா இருக்காதீங்க!
மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடிய இயல்பான சுழற்சி. பெண் பிள்ளைகள் பூப்படைந்ததற்கு பிறகு மாதம் ஒருமுறை 28 நாட்களிலிருந்து 32 நாட்களுக்குள் வரக்கூடும். இதில் 24 நாட்களுக்கு முன்னதாக வந்தாலோ அல்லது 38 நாட்களுக்கு பிறகு வந்தாலோ அது கவனிக்க வேண்டியது. குறிப்பாக மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்த நிலை ஏற்ற இறக்கமாக இருந்தால் அது கவனிக்க வேண்டியதுதான். இதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம் அதோடு மாதவிடாய் காலங்களிலும் சுழற்சி தசைப்பிடிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகளும் அதிகரிக்க கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என்று பார்க்கலாம். மன அழுத்தம் பொதுவாக பெண்கள் பலரும் திருமணத்துக்கு பிறகு மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். இது மறுக்க முடியாதது. பெண்கள் வாழும் சூழ்நிலை பொறுத்து இந்த அழுத்தமானது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். மன அழுத்தமானது ஹார்மோன்களை தற்காலிகமாக மாற்றக்கூடிய அளவுக்கு தன்மை கொண்டது என்று ஆய்வுகள் சொல்கிறது. புதிய