உடனே குழந்தை உண்டாகணுமா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...
உடனே குழந்தை உண்டாகணுமா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...
நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.எனவே, நீங்கள் வரும் ஆண்டில் ஒரு அம்மாவாக மாற திட்டமிட்டால், கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் ஐந்து எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
உடல் எடையை பராமரிக்கவும்
கருவுறுதலைப் பற்றி பேசும் போது உங்க உடல் எடையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதிக எடை அல்லது எடை குறைவாக இருந்தால், உங்கள் ஹார்மோன்கள் அவற்றின் சமநிலையை இழக்கக்கூடும்.இதனால் நீங்கள் கருத்தரிப்பது கடினமாக இருக்கும். மேலும், உங்கள் எடை உங்கள் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். கருவுறுதலை மேம்படுத்த, முதலில் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் எடை பராமரிப்பு. நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள் அல்லது எடை குறைவாக இருந்தால் எடை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.இருப்பினும் நிலையான எடையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.
இரும்புச் சத்து குறைப்பாடு
இரும்புச் சத்து குறைபாடு என்பது உங்களுக்கு அனிமியாவை ஏற்படுத்தும். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை பாதிக்கிறது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க உங்க இரும்புச் சத்து அளவை பராமரியுங்கள். இரத்த ஓட்டத்தில் போதுமான அளவு இரும்புச் சத்து இருப்பது அண்ட விடுப்பின் மலட்டுத்தன்மை அபாயத்தை குறைக்கும்.
ஆல்கஹால், புகைப்பழக்கம்
புகைப்பிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டும் பாதிக்காது. அது கருவுறுதலையும் சேர்த்து பாதிக்கிறது. அமெரிக்கன் சொசைட்டி ஃபார் ரிப்ரொடக்டிவ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சிகரெட் புகையில் காணப்படும் ரசாயனங்கள் பெண்களின் முட்டை இழப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டது.மற்ற ஆய்வுகள், அதிகப்படியான ஆல்கஹால் குடிக்கும் பெண்கள் அதிக கருவுறுதல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்கிறது.
அதிக மன அழுத்தத்தை எடுக்க வேண்டாம்
மன அழுத்தம் என்பது எப்போதும் உங்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். இது உங்கள் இனப்பெருக்க ஹார்மோன்களை பாதிக்கும். எனவே நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பினால் அமைதியாக இருங்கள். மன அழுத்தத்தை குறைக்க முற்படுங்கள்.
கருவுறுதலுக்கான மருந்துகள்
கருவுறுதலுக்கான மருந்துகளில் ஃபோலிக் அமிலம் மற்றும் பிற வைட்டமின்கள் உள்ளன, அவை பிறப்பு குறைபாடுகள் மற்றும் பிற சிக்கல்களை விலக்கி வைக்கின்றன. இருப்பினும் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு உங்க மகப்பேறு மருத்துவர்களை அணுகுங்கள்.
Comments
Post a Comment