மார்பகங்களின் அளவை அதிகரிக்கச் செய்யும் 6 எளிய வழிகள்...



மார்பகங்களின் அளவை அதிகரிக்கச் செய்யும் 6 எளிய வழிகள்...




பெண்கள் எப்போதும் உடல் அழகின் மீதும் சரும அழகின் மீதும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

ஒரு பெண்ணின் புற அழகை பொறுத்தே அவரது அழகை ஆண்கள் தீர்மானிக்கின்றனர். 



மேலும் பெண்கள் என்றாலே அழகான உடல் அமைப்புடனும் சிவந்த சருமத்துடன் இருக்க வேண்டும் என்கிற மனநிலை சமூகத்தில் பொதுவாகவே இருந்து வருகிறது.





பெண்களின் உடல் ஆரோக்கியம்

_________________



பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ளப் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். 



சரும ரீதியான பிரச்சனைகளைக் கையாள பல்வேறு தயாரிப்புகள் நம்மிடையே உள்ளன.

அவற்றைப் பயன்படுத்தி பெண்கள் பளபளப்பான சருமத்தை பெறுகின்றனர்.



ஆனால் உடல் ரீதியான அழகை பெறுவது கொஞ்சம் கடினமான காரியமாகவே உள்ளது.



பெண்களின் புற அழகில் மார்பகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரிய மார்பகங்கள் பெண்களின் அழகின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.



மேலும் சிறிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மற்ற பெண்களால் கேலிக்கு உள்ளாகின்றனர். 



மேலும் பல ஆண்களும் கூட அவர்களை விரும்புவதில்லை. இதனால் பெண்கள் மனரீதியான உளைச்சலுக்கு உள்ளாகுகின்றனர். 



இதனால் பல பெண்கள் பெரிய மார்பகங்களைப் பெற நினைக்கின்றனர்.




எடுப்பான உடல் அமைப்பு

--------------------



மார்பக அளவை அதிகரிக்க உதவும் சில உடற்பயிற்சி முறைகள் உள்ளன. உங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளில் இதை சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை அடைய முடியும்.



இது தசைகளை உருவாக்கவும் எலும்புகளை வலுப்படுத்தவும் மற்றும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது, மேலும் பெண்களின் மார்பக அளவை அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.



எனவே இந்த வலிமையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் பெண்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பெற முடியும். எனவே அந்த பயிற்சிகள் குறித்து இப்போது வரிசையாகப் பார்ப்போம்.




பிளாங்க் ரீச் ( Plank reach)

------------------



இந்த பயிற்சியை செய்ய முதலில் படுத்துக்கொள்ளவும். பிறகு உங்கள் கை மணிக்கட்டு மற்றும் கால் விரல்களை தரையில் ஊன்றி கொள்ளவும்.



உங்கள் உடலானது தலை முதல் கால்வரை ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் உங்கள் வயிறு இறுக்கமாக இருக்க வேண்டும்.



இப்போது இந்த நிலையிலேயே உங்களது இடது கையை முதலில் விடுவியுங்கள். அதை நேராக நீட்டுங்கள், இந்த நிலையில் வலது கை உங்கள் உடலை தாங்கி கொண்டிருக்கும்.



பிறகு இதே போலவே வலது கையை நீட்டுங்கள். அப்போது உங்கள் இடது கை உடலை தாங்கி இருக்கும். இந்த இரு கைகளையும் மாற்றி மாற்றி இந்த பயிற்சியை செய்யவும்.




ச்சேர் டிப் (Chair dip)

--------------



இந்த பயிற்சியை செய்ய நாற்காலி பயன்படுத்தப்படுவதால் இது ச்சேர் டிப் என அழைக்கப்படுகிறது.



இதை செய்ய முதலில் நாற்காலிக்கு முன்னால் திரும்பி நிற்கவும். நேராக நிற்கவும்.

அதன்பிறகு உங்கள் கைகளை நாற்காலியின் மேற்பரப்பின் விளிம்பில் வைக்கவும்.



இந்த நிலையில் உங்கள் மணிக்கட்டுகள் செங்குத்தாக இருக்க வேண்டும். இப்போது நாற்காலிக்கு முன்பாக உங்கள் கால்களைக் கீழ் நோக்கி இறக்கவும். இந்த நிலையில் உங்கள் எடையை உங்கள் கைகள் தாங்கும்.



உங்கள் குதிகாலை நேராக நீட்டவும். அப்படியே தரையில் அமர்வது போன்ற நிலைக்கு செல்லவும். பிறகு மேல்நோக்கி எழும்பவும். 



இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்யவும்.

எடையை குறைக்க தினமும் குடிக்க வேண்டிய பானங்கள் என்னென்ன... என்னென்ன குடிக்கக் கூடாது...




ஷெஸ்ட் ப்ளை ( Chest fly)

----------------



இந்த பயிற்சியை செய்ய உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தப்படும் பெஞ்சை பயன்படுத்தவும். கால்கள் தரையில் ஊன்றி இருக்கும் வண்ணம் பெஞ்சில் படுத்துக்கொள்ளவும்.



இப்போது உங்கள் இரு கைகளிலும் டம்பல்ஸை எடுத்துக்கொள்ளவும். முதலில் கைகளை பட்டாம் பூச்சிபோல நன்கு விரிக்கவும். பிறகு டம்பல்ஸை உங்கள் மார்புக்கு நேராக கொண்டு வரவும்.



பிறகு சிறிது விநாடிகள் அந்த டம்பள்ஸை அப்படியே வைத்திருக்கவும். குறைந்தது 2 முதல் 3 விநாடிகள் அவற்றை உங்கள் மார்பிற்கு நேராக வைத்திருக்கவும். 



இப்போது மீண்டும் கைகளை அகலப்படுத்தவும். இந்த செய்முறையை மீண்டும் மீண்டும் செய்யலாம்.




ப்ளாங்க் வால்க் (Plank walk)

-----------------



ப்ளாங்க் வால்க் உடற்பயிற்சியானது புஷ் அப் நிலையில் இருந்துக்கொண்டு செய்ய வேண்டிய உடற்பயிற்சியாகும்.



புஷ் நிலையை போல உங்கள் மணிக்கட்டு மட்டும் கால் விரல்களைக் கொண்டு உடலை தாங்கும் நிலையில் தரையில் படுக்கவும்.



இந்த நிலையில் உங்கள் உடலை நேர்க்கோட்டில் வைத்துக்கொள்ளவும்.

இப்போது உங்கள் கைகள் மற்றும் கால்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் நகர்த்துவது மூலம் இந்த பயிற்சியை சரியாக செய்ய முடியும்.



அதற்கு முதலில் வலது காலையும் வலது கையையும் ஒரே நேரத்தில் நகர்த்த வேண்டும்.

பிறகு அதே போல இடது கை மற்றும் இடது கால்களைக் கொண்டு செய்யவும். இந்த முறையை திரும்பத் திரும்ப செய்யலாம்.




ஆர்ம் சர்க்கிள்ஸ் ( Arm circles)

-----------------



இந்த பயிற்சியைச் செய்ய முதலில் உங்கள் கைகள் மற்றும் கால்களைப் பறவை போல பரந்த நிலைக்குக் கொண்டு வரவும்.



இப்போது நேராக நிற்கவும். கைகளை இருப்பக்கமும் நீட்டிக் காற்றில் கைகளைக் கொண்டு வட்டமிடவும். 



முதலில் முன்னோக்கியும் பிறகு பின்னோக்கியும் வட்டமிடுங்கள். இதே முறையை மீண்டும் மீண்டும் இடைவெளி விட்டு செய்யவும்.




வால் ப்ரஸ் ( Wall press)

--------------



இதைச் செய்ய ஒரு சுவரிலிருந்து 1 முதல் 2 அடி தூரம் இடைவெளியில் நிற்கவும்.

இப்போது உங்கள் கைகள் இரண்டையும் உங்கள் முகத்திற்கு நேராகச் சுவற்றில் வைக்கவும்.



இப்போது மூச்சை நன்றாக இழுத்து, உங்கள் குதிக்கால்களை மேல்நோக்கி சற்று தூக்கவும். இந்த நிலையில் உடல் எடையைக் கால் விரல்கள் தாங்கும்.



பிறகு கைகளைக் குறுக்கி சுவற்றின் பக்கம் உங்கள் முகம் வரும்படி செய்யவும். ஒரிரு நொடிகள் கழித்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்யவும்.



மார்பக அளவை அதிகரிக்க கடினமான உடற்பயிற்சிகள் அவசியம். அதனுடன் மார்பக அளவை அதிகரிக்க உதவும் சில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. 



குறைந்த புரத உணவுகள், நட்ஸ்கள், காய்கறிகள், இஞ்சி, தேநீர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை உண்பது மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது. 



மேலும் மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்தும் மார்பகங்களின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது.



நன்றி...


மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு நமது சேனலை "subscribe" செய்து கொள்ளவும்...










Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!