பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?


ஒரு சில பெண்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 


பொதுவாக பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். 


ஆனால் பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் தோல் உரிதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா.


ஆனால் உண்மையில் சில பாதிப்புகள் காரணமாக இந்த தோல் உரிதல் நிலை ஏற்படுகிறது.



​பெண்ணுறுப்பு சுகாதாரம்



பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் பாக்டீரியா தொற்று, ஈஸ்ட் தொற்று, சுத்தமின்மை இவற்றின் காரணமாக தோல் உரிதல் ஏற்படுகிறது.


அதே மாதிரி எக்ஸிமா போன்ற சரும நோய்த்தொற்று சருமத்தில் மட்டுமல்ல பெண்ணுறுப்பு பகுதியில் கூட உண்டாகும்.


இதன் காரணமாக கூட உங்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிதல் ஏற்படலாம்.


சரி வாங்க பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிய எந்த மாதிரியான விஷயங்கள் காரணமாகிறது என அறிவோம்.



ஈஸ்ட் தொற்றுக்கள்



பெண்ணுறுப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் ஈஸ்ட் தொற்றுக்கள் காரணமாக கூட தோல் உரிதல் நிலை ஏற்படலாம். 


இந்த ஈஸ்ட் தொற்று ஆனது கேண்டிடா என்ற பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சியால் இந்த தொற்று ஏற்படுகிறது. 


இந்த பூஞ்சை தொற்றின் அதிகப்படியான வளர்ச்சியால் தொற்றானது ஏற்படுகிறது. ஈஸ்ட் நோய்த்தொற்றின் ஒரு சில அறிகுறிகளாவன : அரிப்பு, எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு , உடலுறவின்போது வலி, வெள்ளை மற்றும் சாம்பல் நிற திரவ வெளியேற்றம் ஆகியவை ஏற்படலாம்.



​தோல் அழற்சி


சோப்பு, வாசனை திரவியங்கள் , சலவை சோப்பு, எண்ணெய்கள் பயன்படுத்துவது, பெண்ணுறை அணிவது, பெண்ணுறுப்பு அழற்சி, சொறி போன்றவை காரணமாக தோல் உரிதல் ஏற்படலாம். 


தோல் அழற்சியால் சொறி, அரிப்பு, கொப்புளங்கள், தோல் உரிதல் மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படும்.



​பாக்டீரியல் வஜினோஸிஸ்



பெண்ணுறுப்பு பகுதியில் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்கள் வளரும் போது பெண்ணுறுப்பு பகுதியின் pH சமநிலை மாற்றமடைகிறது. 


பாலியல் உறவு, நறமணமுள்ள சோம்புகளைப் பயன்படுத்துதல், அடிக்கடி பிறப்புறுப்பு பகுதியை கழுவுவது ஆகியவற்றின் காரணமாக பாதிப்பு ஏற்படலாம்.



​லிச்சென் ஸ்க்லெரோசஸ்



இந்த பாதிப்பு மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படுகிறது.


சில சமயங்களில் பருவ வயதை அடைந்த பெண்களும், இளம் பெண்களும் பாதிப்படைகின்றனர். 


இந்த பாதிப்பால் பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி வெள்ளை திட்டுகள் தோன்றலாம்.


இது அரிப்பு, அசெளகரியம் மற்றும் தோல் கிழிசல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.









Comments

Popular posts from this blog

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!