மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?:
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபட