ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந...
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி! மேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது சேனலை Subscribe செய்து கொள்ளவும் நன்றி
பண்டைய கால தமிழ் குடி மக்களின் சமூக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் 'முருக' வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந்து இருந்தன. தமிழ்நாட்டின் அடிகானல்லூர் என்ற இடத்தில் இருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகப் பழமையுமான மயானங்களில் இருந்த கல்லறைகளில் 'வேல்' மற்றும் 'சேவல்' சின்னங்கள் கிடைத்துள்ளன. பண்டைய காலத் தமிழர்களைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் மிக முக்கியமானவரும், பெரும் வல்லுரனுமான பேராசிரியர் 'பீ. டி. ஸ்ரீனிவாசன்' என்பவருடைய கூற்றின்படி, அடிகானல்லூரில் இருந்த அந்த கல்லறைகள் 7,000 ஆண்டுகளுக்கு முட்பட்டவை. ஆரியர்கள் வட நாட்டின் வழியாக இந்தியாவிற்கு வந்த பின் முன்னர் அவர்கள் பின்பற்றிய வழக்கத்தைப் போன்றே இறந்து போன பிணங்களை எரிக்கத் துவங்கினர். அதற்கு முன்னர் அந்த இடத்தில் பிணங்கள் எரிக்கப்பட்டன என்பதற்கான எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை . சரித்திர காலத்திற்கு முன்னரே 'வேல்' வழிபாடும், முருக வழிபாடும் தமிழர்களிடம் இருந்தது. அதில் அவர்கள் தீவிர அர்வமும் கொண்டு இருந்தனர். 'தொல்காப்பியம்', 'பாட்டுப...
Comments
Post a Comment