ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந...
காதலுக்காக காத்திருப்பது சுகமே! உண்மையான காதலுக்காக காத்திருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அவ்வாறு காத்திருப்பவரையும் அழகுபடுத்தி, அவர் பலவிதமான நல்காரியங்களை செய்ய வைக்கிறது. ஆகவே உண்மையான காதலுக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்பதை பார்க்க காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். பருவம் வந்த ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும், ஒருவருக்கு ஒருவர் மையல் கொள்ளும் போது இந்த காதல் துளிர்க்கிறது. உண்மையான காதல் வளர்வதற்கு சில முக்கியமான காரணிகள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் காதலுக்காக காத்திருப்பது ஆகும். காதலுக்காகக் காத்திருப்பதைப் பற்றி ஏராளமான கருத்துகளும், விமர்சனங்களும் உள்ளன. சிலர் காதலுக்காகக் காத்திருப்பது என்பது ஒரு போற்றத்தக்க மதிப்பீடு என்றும், மதிப்புக்குரியது என்றும் நம்புகின்றனர். அதே நேரத்தில் வேறு சிலரோ, இது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கருதுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், காதலில் காத்திருப்பது என்பது நமது முழு ஆற்றலையும் செலவழித்து, இறுதியில் ஒன்றுமே பெறாமல் இழப்பது ஆகும் என்று நம்புகின்றனர். பொதுவாக, ஒருவருடைய காதலுக்காக மற்றும் அவருடைய காதல் உறவிற்காக அவர்...
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி! மேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது சேனலை Subscribe செய்து கொள்ளவும் நன்றி
Comments
Post a Comment