இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஓர் அற்புதமான இயற்கைப் பொருள் தான் பூண்டு.

பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதற்கு அந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம்.
அப்படி இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இக்கட்டுரையில் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த உறைவைத் தடுக்கும்

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.


சளி

சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.


வாய்வுத் தொல்லை

பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.




புற்றுநோய்

பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.


பூஞ்சை தொற்று

காது அல்லது பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் இருந்தால், ஒரு பூண்டை நன்கு அரைத்து, அதன் சாற்றினை அவ்விடத்தில் விடுங்கள். இதனால் பூஞ்சை தொற்று விரைவில் போய்விடும்.



கொலஸ்ட்ரால்

இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.



குறிப்பு

பூண்டு கொண்டு உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைக்கும் முன், மருத்துவரை கலந்தாலோசித்து, அவரது பரிந்துரையின் பேரில் பயன்படுத்துங்கள். ஏனெனில் சிலருக்கு பூண்டு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.


Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!