வரலாற்றில் இன்று 25.01.2018
வரலாற்றில் இன்று 25.01.2018 ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1327 – 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1494 – இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான். 1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். 1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர். 1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர். 1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். 1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது. 1918 – உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர். 1919 – நாடுகளின் அணி நிறுவப்பட்டது. 1924 – முதலாவது குளிர்கால ஒலிம