பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்
பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்.... ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்ப்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள். மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கணவன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது. அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான். இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள். இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கணவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள். இளநீர் ...