Posts

Showing posts from 2024

எத்தனை பேருக்கு தெரியும் இந்த ''நல்லதங்காள் கதை''

Image
அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி. அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி. நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி. கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம். பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள். தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள். நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான். வேலி நிறைய வெள்ளாடுகள் பட்டி நிறைய பால்மாடுகள் மோர் கடைய முக்காலி பொன்னால் அளக்குற நாழி பொன்னால் மரக்கால் பொன்னால். இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகல...

முடி நரைப்பதற்கான காரணம் தெரியுமா?

இன்றைய காலத்தில் இளம் வயதினர் உள்பட பலரும் நரைமுடி பிரச்னைக்கு ஆளாகின்றனர். நரை முடி ஏன் வருகிறது என்பதைக் கண்டறிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் 'மெலனோசைட் ஸ்டெம்' எனும் செல்கள் முடியின் நிறத்தை தீர்மானிப்பது தெரியவந்துள்ளது. உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மெலனோசைட் ஸ்டெம் செல்கள் பலவீனமடைதல் போன்ற காரணங்களால் முடி நரைப்பது தெரியவந்துள்ளது.

ஆண்கள் அதிகம் விரும்புவது மதுவா? மாதுவா?? சூதுவா?

Image
ஆண்கள் அதிகம் விரும்புவது நிம்மதியான தூக்கத்தை தான். சண்டை இல்லாத வீடு, சமைக்க தெரிந்த மனைவி, பொறுப்பான குழந்தைகள், முடிவுகளில் மூக்கை நுழைக்காத பெற்றோர்/ உறவினர்கள், நிம்மதியான தூக்கம். இந்த ஐந்தும் தான் ஆண் மகனின் விருப்பமாக இருக்கிறது. இந்த ஐந்தாவதை பெற வேண்டுமானால் மேற்சொன்ன நான்கும் கிடைத்திருக்க வேண்டும். முதல் நான்கில் முக்கால்வாசியேனும் பூர்த்தியடைய நல்ல புரிதல் உள்ள இல்லாள் அவசியம் தேவை. எனவே, கூட்டி கழித்து பார்த்தால் ஆண்கள் அதிகம் விரும்புவது மதுவையும் அல்ல, மாதுவையும் அல்ல, சூதுவையும் அல்ல, நல்ல மனைவியை தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. 🔞

தினமும் உடலுறவு.. கோடி நன்மைகள் இருக்கு ஓகே.. ஆனால் அந்த 2 பிரச்சனையும் இருக்கே!

உடலுறவு என்பது ஆண் பெண் இடையே உள்ள இயல்பான மற்றும் நெருக்கமான விஷயம். ஆனால் ஒருவர் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உடலுறவு என்பதை வெறும் உடல் சார்ந்தது இல்லை. அதில் பல உளவியல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கிறது. இது குறித்து மருத்துவர்கள் பலரும் விளக்கியுள்ளனர். அதேநேரம் தினசரி உடலுறவு கொள்வோருக்கு உடலில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து விவாதிக்கப் படுவதில்லை. இதனால் நன்மை அதிகமா இல்லை பாதிப்புகள் அதிகமா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவர் சொல்வது என்ன:  இதற்கிடையே பிரபல கைனகாலஜிஸ்ட் வினுதா இது தொடர்பாக விளக்கியிருக்கிறார். அவர் கூறுகையில், தினசரி உடலுறவு கொள்ளும் போது பல நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மன அழுத்தம் குறைகிறது. பாட்னர் உடன் நெருக்கம் அதிகரிக்கிறது. தம்பதி மகிழ்ச்சியாக ஒன்றாக இருப்பதையே இது காட்டுகிறது. தினமும் உடலுறவு கொள்ளும் போது இதயத் துடிப்பு மேம்பட்டு, ரத்த ஓட்டம் சீராகிறது. இது இதய ஆரோக்கியத்தை மே...