தினமும் உடலுறவு.. கோடி நன்மைகள் இருக்கு ஓகே.. ஆனால் அந்த 2 பிரச்சனையும் இருக்கே!


உடலுறவு என்பது ஆண் பெண் இடையே உள்ள இயல்பான மற்றும் நெருக்கமான விஷயம். ஆனால் ஒருவர் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உடலுறவு என்பதை வெறும் உடல் சார்ந்தது இல்லை. அதில் பல உளவியல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கிறது. இது குறித்து மருத்துவர்கள் பலரும் விளக்கியுள்ளனர்.

அதேநேரம் தினசரி உடலுறவு கொள்வோருக்கு உடலில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து விவாதிக்கப் படுவதில்லை. இதனால் நன்மை அதிகமா இல்லை பாதிப்புகள் அதிகமா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

மருத்துவர் சொல்வது என்ன: 

இதற்கிடையே பிரபல கைனகாலஜிஸ்ட் வினுதா இது தொடர்பாக விளக்கியிருக்கிறார். அவர் கூறுகையில், தினசரி உடலுறவு கொள்ளும் போது பல நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மன அழுத்தம் குறைகிறது. பாட்னர் உடன் நெருக்கம் அதிகரிக்கிறது. தம்பதி மகிழ்ச்சியாக ஒன்றாக இருப்பதையே இது காட்டுகிறது.

தினமும் உடலுறவு கொள்ளும் போது இதயத் துடிப்பு மேம்பட்டு, ரத்த ஓட்டம் சீராகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அடிக்கடி உடலுறவு கொள்வோருக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைவதாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட அவசியமான இம்யூனோ குளோபுலின்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக மாற்றுகிறது.

உடலுறவின் போது வெளியாகும் எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. இதனால் ஒற்றைத் தலைவலி மற்றும் மூட்டுவலி குறையும். மேலும் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். மேலும், உடலுறவில் தொடர்ச்சியாக ஈடுபடும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இது ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்த உதவுவதால் மாதவிடாய் நின்ற பின் நன்மை தரும் என்றார்.

ஹார்மோன் மாற்றங்கள்: 

மேலும், மன ரீதியாகவும் இது பல நன்மைகளைத் தருகிறதாம். ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தினசரி உடலுறவின் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்தும் மருத்துவர் பட்டியலிட்டுள்ளார்.

"காதல் ஹார்மோன்" என்று அழைக்கப்படும் ஆக்ஸிடாஸின், பார்ட்னர்கள் உடனான பிணைப்பு மற்றும் நெருக்கத்தை ஊக்குவிக்கிறது. 

எண்டோர்பின்கள்: 

இந்த ஹார்மோன்கள் வலியைக் குறைக்கப் பயன்படும். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். இது உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் மாதவிடாய் காலத்தில் உதவும். மேலும், மன ரீதியாகவும் நன்மையைத் தரும்.

பிரச்சினை: 

அதேநேரம் தம்பதிகள் தினசரி உடலுறவு கொள்ளும் போது சில பிரச்சினைகளும் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார். குறிப்பாக உடலில் அசௌகரியம் ஏற்படும். குறிப்பாக ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு இது நிலைமையை மோசமாக்கும். மேலும், சுத்தமாக இல்லாவிட்டால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட பிற நோய்த்தொற்றுகளின் அபாயத்தையும் இது ஏற்படுத்தும். 

மேலும், தினசரி எதிர்பார்ப்புகள் என்பது அழுத்தம் அல்லது பதட்டத்திற்கு வழிவகுக்கும். இது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன" என்று எச்சரித்தார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!