எத்தனை பேருக்கு தெரியும் இந்த ''நல்லதங்காள் கதை''
அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி. அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி. நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி. கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம். பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள். தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள். நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான். வேலி நிறைய வெள்ளாடுகள் பட்டி நிறைய பால்மாடுகள் மோர் கடைய முக்காலி பொன்னால் அளக்குற நாழி பொன்னால் மரக்கால் பொன்னால். இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகல...