மனைவிக்கு கணவர் மேல் கோபம் வரலாம். ஆனால் வெறுப்பு.... கூடாது
பலர் பார்க்க ஆதர்ஷ தம்பதியர் போல் தெரிந்தாலும், கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தாலோ அல்லது புலம்பலை கேட்க ஆரம்பித்தாலோ நம் தலையே கிறுகிறுக்க ஆரம்பித்து விடும். வாழ்க்கை பற்றி சரியான புரிதல் இல்லாதத காரணத்தால், அவ்வளவு வெறுப்பு, ஒருவர் மேல் இன்னொருவருக்கு. இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும். மாற்றிக் கொள்ள இயலாதவற்றை அப்படியே அனுசரித்து கொள்ளலாம். மாற்றிக்கொள்ளக் கூடியதை மாற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழலாம். வெறுப்புக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், முக்கியமான 7 மட்டும். 1. குறை சொல்வது. நடை, உடை, பாவனையை குறை சொல்வது. குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமோ, காதல் திருமணமோ... "பாத்துப்பாத்து தானே கல்யாணம் செஞ்சீங்க, இப்ப என்ன புதுசா?" என்ற வெறுப்பு. சமையலில் குறையெல்லாம் இப்போது யாரும் சொல்வதில்லை, குக் வித் கோமாளியை பார்த்து மிரண்டு போயிட்டாங்க. 2. திட்டுவது. கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுவது. அதைவிட நக்கலாக/கேலியாக பேசுவது இன்னும் வெறுப்பை வளர்க்கும். 3. பொய் சொல்வது, ஏமாற்றுவது. ஒரு முறை நம்பிக்கை இழந்து விட்டால், கடவுளே வந்து சாட்சி சொன்னாலும்... ம்ஹூம், சான்ஸே...