கவிதை
மனசுல இருக்குற அன்ப, வெளிக்காட்டாம மனசுக்குள்ளயே, வெச்சிருக்குது ஒரு இதயம்.
என்மேல, கொஞ்சம் கூட, அன்பு இல்லையானு, மனசுக்குள்ளயே கொட்டித் தீர்க்குது இன்னொரு இதயம்.
இதுல, வேடிக்கை என்னானா, ஒரு இதயத்துக்கு அந்த அன்ப வெளிக்காட்டத் தெரியல, இன்னொரு இதயத்துக்கு, அந்த அன்புக்கு தான் ஏங்குறேன்னு சொல்ல முடியல. காலப் போக்குள, அந்த அன்பு காணாம போயிடுது.
ஆனா, ஒருத்தர் மேல ஒருத்தர், வெச்சிருந்தது
உண்மையான காதல்னு, அவங்க தெரிஞ்சிக்கலாமலே பிரிஞ்சிர்றாங்க...
இந்த மாதிரியான அன்ப, நீங்க மிஸ் பண்ணிடாதிங்க, உங்க அன்ப அவங்களுக்கு வெளிப்படுத்தாத பட்சத்துல அவங்களுக்கு எப்படி அது தெரியும்..
அதனால, அந்த அன்ப அவங்களுக்கு வெளிப்படுத்துங்க, ஒரு நாளும் அந்த அன்பு உங்கள விட்டுப் போகாது..
Comments
Post a Comment