உங்க துணையுடன் அடிக்கடி சண்டை வருகிறதா?
உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படுவது புதிதல்ல.
ஆனால் அந்த சிக்கல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
ஏனெனில், உங்கள் வாழ்க்கைத் துணை என்பவர் உங்களின் கடைசி காலம் வரையிலும் உங்களுடன் இருக்கப் போகும் ஒரே நபர்.
உங்கள் துணையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அவர்களிடம் எப்படி பேசுவதென்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்.
உறவுகளுக்குள் இதுபோன்ற சிக்கல் இருப்பது இயல்பானது.
பல தம்பதியர் தங்கள் துணையிடம் மன்னிப்புக் கேட்க வழிகளைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள்.
ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசத் தவறும் தம்பதிகள், இந்த சிக்கலை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.
ஆயினும்கூட, உங்கள் தவறை நேர்மையாக ஒப்புக்கொள்வது உங்கள் துணையிடமிருந்து மன்னிப்பு கோருவதற்கான முதல் படியாகும்.
'சாரி' என்பது சிறிய வார்த்தை மட்டுமே, ஆனால் அந்த வார்த்தை அதிக அர்த்தத்தைக் கொண்டுள்ளன.
எனவே தவறு உங்கள் மேலிருந்தால் அதை தாராளமாக ஒப்புக்கொள்ளுங்கள்.
மனித உறவுகளைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் ஆழமாகவும் வெறித்தனமாகவும் அன்பை பிறரிடம் கொண்டிருக்கும்போது சண்டை/சச்சரவு என்பது எந்தவொரு உறவிலும் தவிர்க்க முடியாத பகுதியாகும்.
கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் எப்போதும் அந்த உறவினை சிக்கலுக்குள் தள்ளிவிடாது.
மாறாக சண்டை என்பது தம்பதிகளுக்கு தங்களது உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் ஒரு காரணி.
சிறு கால இடைவெளிக்குப் பின் துணையுடன் பேசுங்கள்
உறவுகளில் சண்டை சச்சரவு என்பது சாதாரணமான ஒன்று
சண்டைக்குப் பின்னர் அமைதி காத்து அதை மற்றொரு நாள் பேசி சமாதானம் செய்வதுதான் சிறந்த வழி.
சண்டை மென்மேலும் வளர்ந்துகொண்டே இருந்தால் உண்மையில் சிக்கல் அதிகமாகும்.
அதனால் விவாதத்திற்குப் பிறகு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இடைவெளி எடுத்து, பின்னர் உங்கள் துணையுடன் அமர்ந்து பேசி பிரச்னையை சுமூகமாக முடிப்பதுதான் சிறந்தது.
கோபத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் சரியானதாக இருக்க முடியாது.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிறிது கால இடைவெளி உங்கள் துணையும் யோசிப்பதற்கு வழிவகுக்கும்.
துணைகளுக்கிடையில் மனம் முன்வந்து கேட்கப்படும் மன்னிப்பானது அவர்களது உறவை மேலும் பலப்படுத்தும்.
அவர்கள் உறவுகளுக்கு இடையில் இருக்கும் புரிதலை மேலும் அதிகப்படுத்தும்.
இன்னும், நீங்கள் உங்கள் துணையிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்குறீர்களா?
அப்படியானால், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.
உங்கள் துணைக்குப் பிடித்த பரிசுகளை வாங்கிக் கொடுங்கள் அல்லது நீங்கள் எவ்வளவு வருந்துகிறீர்கள் என்பதை உங்கள் சைகைகள் மூலமாக உணர்த்துங்கள்.
நம்பிக்கை தரும் செயல்களைச் செய்யுங்கள்
கடிதத்தின் மூலம் உங்கள் 'சாரியை' வெளிப்படுத்துங்கள்.
சில நேரங்களில், பேசும் சொற்களின் மூலம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறிவிடுவோம்.
ஆனால் நாம் அதை ஒரு காகிதத்தில் எழுதலாம். நம் மனதில் இருப்பதைக் குறிப்பது நம் எண்ணங்களை சிறப்பாகச் சேகரிக்க உதவும்.
ஒரு வேலை, உங்களது மன்னிப்புக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்கள் துணையிடம் இருந்து பரிசுகள் கூட உங்களுக்கு கிடைக்கலாம்.
உங்கள் துணையுடன் சண்டைக்குப் பின்னர் அவர்களை சாந்தப்படுத்தும் செயல்களைச் செய்வது முக்கியம்,
அவர்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்யலாம், அவர்களை புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்,
அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கியும் தரலாம்.
இன்னொன்று. மன்னிப்புக் கேட்க தயங்குபவரிடம் இருந்து 'I LOVE YOU' என்ற வார்த்தையைக் கேட்ட பின்னர், உங்கள் துணை ஆச்சரியத்தில் உறைந்துபோகலாம்.
சிக்கல்கள் அனைத்தும் சட்டென முடிவுக்கு கூட வந்துவிடலாம்.
பிறகு உங்கள் வாழ்க்கையை இனிமையாக தொடங்க இது ஒரு நல்ல தொடக்கமாக மாற வாய்ப்புகள் உண்டு.
அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான தீர்வுகளை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
குறைகளை உணர்த்தவேண்டும் என்பதில் அவசரம் கூடாது
உறவுகளுக்குள் மூன்றாவது மனிதர்களால் சிக்கல் ஏற்படுவது வழக்கம்.
அப்படி பிரச்னை ஏற்பட்டுவிட்டால் அதை சுமூகமாக தீர்ப்பதற்கான வழியைத் தேடாமல் மேன்மேலும் உங்கள் துணையை நீங்கள் தவறை ஏற்றுக்கொள்ளுமாறு கூறுவது சரியான செயல் அல்ல.
உங்கள் துணை செய்த தவறை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பதை விட்டுவிடுவது நல்லது.
வெறும் வாய்ச் சொல்லாக பழியைக் கூறினால் சிக்கல் அதிகமாகிவிடும்,
தவறை புரிந்துகொள்வதற்கான முயற்சியை நீங்களும் மேற்கொள்ள வேண்டும்.
தீர்வைக் கண்டறியாமல் பிரச்னைகளை மேன்மேலும் வளர்க்க வேண்டாம்.
'மன்னிப்பு' என்ற வார்த்தைக்கான முக்கியத்துவத்தை இருவரும் அறிந்திருப்பது முக்கியம்.
எனவே, உங்கள் துணையிடம் மன்னிப்புக் கேட்பதற்கு முன் உங்களுக்கென்று சிறிது நேரத்தை எடுத்துக்கொண்டு நன்றாக சிந்தித்து செயல்படுங்கள்.
மற்றவரின் தவறை ஏற்றுக்கொள்வது ஒரு விதம்,
ஆனால் நீங்கள் தவறு செய்ததாக மற்ற நபருக்குத் தெரியப்படுத்துவது கசப்பான மாத்திரையை விழுங்குவதற்குச் சமம் ஆகும்.
துணைக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்
ஒருவழியாக உங்கள் துணையுடனான சண்டை முடிந்த பிறகு அவரின் தவறைப் புரியவைக்க முயற்சிக்கலாம்.
தவறு உங்கள் மீது இருந்தால் அந்தத் தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அந்த சண்டையின் சூட்டில் இருந்து வெளிவரலாம்.
பின்னர் உங்கள் துணைக்கு அவர்கள் விரும்பிய பொருட்களைப் பரிசளிப்பது, திரைப்படம் பார்க்கச் செல்வது, இருவரும் தனியாக ஹோட்டல்கள், பார்க்குகள், பீச் போன்ற இடங்களுக்குச் சென்று மனதை இலகுவாக்க முயலுங்கள்.
உங்கள் துணைக்குப் பிடித்ததைச் செய்தால் நிச்சயம் பிரச்னை சுமூகமாக முடிந்துவிடும்.
நினைவில் கொள்ளுங்கள், அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டு அவர்களது கோபத்தை மேலும் அதிகப்படுத்தி விடாதீர்கள்.
சண்டைக்குப் பிறகு 'மன்னிக்கவும்' என்று வார்த்தையை நீங்கள் உங்களையே கட்டாயப்படுத்தி உங்கள் துணையிடம் கேட்கக் கூடாது.
இறுதியாக செய்ய வேண்டியது
உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படுவது புதிதல்ல.
ஆனால் அந்த சிக்கல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
ஏனெனில், உங்கள் வாழ்க்கைத் துணை என்பவர் உங்களின் கடைசி காலம் வரையிலும் உங்களுடன் இருக்கப் போகும் ஒரே நபர்.
அவர் மட்டும்தான் என்ற எண்ணத்தை மனதில்கொண்டு, உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும் உண்மையாகவும் பழகி வாழ்க்கையை வழிநடத்துவது மகிழ்ச்சி தரும்.
உங்கள் இருவருக்குமான அன்யோன்யத்தை எப்போதும் வளர்க்க முயற்சி செய்யுங்கள். பிரச்னைகளை விரைவில் முடித்துவிட்டு பேசத் தொடங்குங்கள்.
வாழ்க்கை இனிமையாக இருக்கும்
Comments
Post a Comment