ஒவ்வொரு சாதாரண பெண்ணின் ஆசை
என் தோழனாக வரப் போகும் கணவனே.. நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஆசைகள் உண்டு இது கவிதை அல்ல நான் கனவுகளால் கோர்த்த மாலை என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா? கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோளுரசி நடக்க ஆசை... உன் சுட்டு விரல் பிடித்து உன் பாதம் தொடர ஆசை... உன் கால் நகம் வெட்டிவிட, உன் கையில் மருதாணி வைத்திட ஆசை... உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ படிக்க நான் கேட்க ஆசை... ஒரே போர்வைக்குள் நீயும் நானும் உறங்கிட ஆசை... உனக்காக காத்திருக்க ஆசை... கால தாமதமாய் வரும் நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை... நீ சொல்லும் சின்னசின்ன பொய்கள் எப்பாதும் கேட்க ஆசை... நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை... அந்த சண்டைக்கு பின் வரும் சமாதானம் ஆசையோ ஆசை... உன்விரல் தொடும் மல்லிகைப் பூ தலைசூட ஆசை... உன்விழி சொல்லும்கவிதை வாசித்து பார்க்க ஆசை... நீள்கின்ற தார் சாலையில் உன்னோடு ஓர் மிதிவண்டிப் பயணம் போக ஆசை... நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை... பௌர்ணமி நிலவில் மொட்டை மாடியில் உன்னோடு நிலா சோறு உண்ண ஆசை.