ஒரு சின்ன கற்பனை

ஒரு சின்ன கற்பனை




ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.


பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
 பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்.

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும்   வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

 முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக் கணக்கின் பெயர் - காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது
 நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான். நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும்
 புத்தம் புதிதாக நம்கணக்கில் 86400 நொடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400 வினாடிகள் என்பது அதற்கு சமமானஅல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? 

🕛🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙🕚

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக  ஓடிவிடும்.🏃

சந்தோஷமாக இருங்கள்....

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள்...

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!