எழுந்து வா இளைஞனே!

காத்திருக்கிறது வாழ்க்கை




காதல் தோல்வி  என்று
கையில் மதுவோடும்...
காதலிக்கவில்லை என்று
கையில் கயிரோடும்...
காதலை ஏற்கவில்லை என்று
கையில் விஷத்தோடும்...
காதலை மறக்க முடியவில்லை என்று
கையில் சிகரெட்டோடும்
காலத்தை கழித்தது போதும்
எழுந்து வா இளைஞனே!- உனக்காக
ஒரு வசந்தகால வாழ்க்கை
காத்துக் கொண்டிக்கிறது....
காதலில் தோற்றல் என்ன
வாழ்க்கயில் ஜெயித்துக் காட்டலாம்
எழுந்து வா இளைஞனே!
மரணத்தை தேடி நீ ஏன் செல்கிறாய்
மரணமே ஒரு நாள்
உன்னை தேடி வரும்...
தோற்றவரெல்லாம்
இறப்பது தான் முடிவென்றால்
இந்த மனித இனம்
என்றோ முடிந்திருக்கும்....
அணைத்துக் கொண்டு
வாழ்வது தான்
காதலென்று நினைத்து விடாதே!
நினைத்துக் கொண்டு வாழ்வதும்
காதல் தான்.....
பிரசவத்தின் வலிக்கு பயந்து
நம்முடைய தாய் இறந்திருந்தால்
நம்மால பிறந்திருக்க முடியுமா?
வலியில்லாத வாழ்க்கை
வையகத்தில் ஏது?
மதியால் விதியை வெல்ல முடியும் என்றாலும்
இந்த விதி எல்லாவற்றிக்கும் பொருந்தாது
காலத்தின் முடிவை
படைத்த கடவுலாலும் மாற்ற முடியாது...
உன் காதலியின் பிரிவு
உன்னை துன்புறுத்துவது போலத்தானே
உன்னுடைய பிரிவு
உன் குடும்பத்தை துன்புறுத்தும் என்பதை
உன்னால்
உணர முடியவில்லையா??
வாழ்வதற்காகத் தான் காதல்
காதலால் சாதல் வருமென்றால்
இங்கு காதல் எதற்கு?
காதலிக்காத மனிதன் இல்லை
காதலுக்காக செத்தால்
மனிதனே இல்லை....!!!!

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!