தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலே நரை முடி பிரச்சனைக்கு தீர்வு

இன்றைய கால கட்டத்தில் தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலே நரை முடி பிரச்சனை ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ளது. இதனால் அழகு குறைவதோடு, தன்னம்பிக்கையும் இல்லாமல் போய்விடுகிறது. தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. ஆகவே முடியை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பல்வேறு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள் மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.
கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான தலை முடியை பெறலாம். உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.
எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.
மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது. நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, முடியின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் பயோட்டின் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.
கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும். தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.
தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள்
மன உளைச்சல், கோபம், படபடப்பு. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம். கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது. கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது.

முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது. முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள் : வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும். தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும். நரைமுடி கருப்பாக வேண்டுமா? பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி 12 நரையை போக்கவல்லது.
கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.
முடி கொட்டுவதை தடுக்க வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும். இதனால் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, கூந்தல் பிரச்சனைகளான முடி வெடிப்பு, வறட்சி போன்ற அனைத்தையும் சரிசெய்யலாம். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சில ஜூஸ்களை குடிப்பதை விட, அதனை தலைக்கு நேரடியாகப் பயன்படுத்துவதால், இதில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, அதனால் கிடைக்கும் பலனும் விரைவில் தெரியும். ஆனால் சில ஜூஸ்களை குடிப்பதனால், கூந்தலின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை அதிரிக்கலாம். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் வேறு எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் சேர்க்காமல் செய்தால் தான், நல்ல பலன் கிடைக்கும். திராட்சை சாற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். எனவே தினமும் தவறாமல் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
பழங்களின் ராஜாவான மாம்பழத்திலும் நல்ல வளமையான அளவில் வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தது. எனவே இத்தகைய பழத்தை தலைக்கு பயன்படுத்துவதை விட, சாப்பிட்டு வந்தால் கூந்தலுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லது. சிட்ரஸ் பழங்களில் கிவியும் ஒன்று. இத்தகைய கிவிப் பழத்தை சாறு எடுத்து, அதனை கூந்தலுக்கு பயன்படுத்தினால், அதில் உள்ள வைட்டமின் சி, கூந்தலின் வலிமை அதிரிக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், இது கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தப் பொருளாகக் கருதப்படுகிறது. செம்பருத்தி ஜூஸ் செம்பருத்தியை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் செம்பருத்தியின் பூ மற்றும் இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து வர, பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
நெல்லிக்காய் சாறு நெல்லிக்காய் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டவை. உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், அது கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் கூந்தல் மெலிதாவதை தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது. கேரட்டில் கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஜூஸை தலைக்கு தடவுவதை விட, குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஸ்கால்ப்பில் போதிய அளவில் எண்ணெயை சுரக்கச் செய்யும்.
அழகான முடியை பெற தவறாமல் செய்ய வேண்டிய செயல்கள்!!!
தலை முடி என்பது நம்முடைய அழகை மெருகேற்ற உதவும். இது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் தான். அதனால் முடியை பராமரிப்பதில் ஆண்களும்,பெண்களும் அதிகம் மெனக்கெடுவதுண்டு. தலை முடியினால் மீண்டும் உங்கள் நாள் மோசமானதாக அமைந்துள்ளதா? ஆரோக்கியமான தலை முடி என்ற வெற்றிகரமான மகுடம் உங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றிவிடும். கீழ்கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். தலை முடி வறட்சியாகவும், சுருண்டு கொள்ளவும் செய்தால், வாரம் ஒரு முறை சூடான எண்ணெய் மசாஜ் செய்யுங்கள். அதனை தொடர்ந்து சாதாரண ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி குளியுங்கள். அளவுக்கு அதிகமான கலரிங், இரசாயனங்கள் மூலம் முடியை நேராக்குதல் அல்லது சுருட்டி விடுதல் மற்றும் இதர ரசாயன சிகிச்சைகளை சில வாரங்களுக்கு மூட்டை கட்டி வையுங்கள். வீட்டில் செய்யப்பட்ட தலை முடி மாஸ்க்கை பயன்படுத்துவது, ட்ரையர் பயன்படுத்துவது தவிர்ப்பது போன்றவைகள் தலை முடியை நன்றாக வைக்கும்.
இப்போது தலை முடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பார்ப்போம். ஷாம்பு போடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை…
தலைக்கு குளிக்கும் போது, ஸ்கால்ப்பை சுத்தம் செய்வதில் கவனம் இருக்க வேண்டும். அதனால் விரல்களை கொண்டு மென்மையாகவும், திடமாகவும் ஸ்கால்ப்பில் நுரையுடன் மசாஜ் செய்யுங்கள். தலையை கழுவிய பின் நல்ல கண்டிஷனரை பயன்படுத்துங்கள். அதனை ஒவ்வொரு முடியிலும் படுமாறு தடவி, பின் நன்றாக கழுவி விடுங்கள். தவிர்க்க வேண்டியவை – வெப்ப முறையில் தலைமுடியின் ஸ்டைலை மாற்றுவது அல்லது அயர்ன் மற்றும் வெப்பமான கர்லரை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து, ஈர தலைமுடி இயற்கையாகவே காய விடுங்கள். – ஆல்கஹால் உள்ள தலைமுடி ஜெல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். – சுத்தமில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சீப்பு மற்றும் பிரஷ்களை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தலை சருமத்தை எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யுங்கள் – சீரான முறையில் கூந்தலுக்கு எண்ணெய் தடவினால், முடியின் தரத்தில் ஏற்படும் வித்தியாசத்தை கண்டிப்பாக நீங்கள் கவனிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆகவே தலைக்கு எண்ணெயை கொண்டு இதமாக மசாஜ் செய்யுங்கள். – மூலிகை கலந்த ஆலிவ், ஜோஜோபா, பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்களில் முடியை மேம்படுத்தும் குணங்கள் உள்ளது. ;அதனால் அது தலை சருமத்திற்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்கும். – தலைக்கு நன்றாக ஒரு மசாஜ் ஒன்றை செய்தால், நல்ல தூக்கம் வரும். மேலும் காலை புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் உதவும். – முடிக்கு எண்ணெய் தேய்க்கும் போது, அதன் நுனிகளில் படுமாறு தேய்க்க வேண்டும். ஆண்களுக்கு எப்படி ஆரம்பிக்கிறது? ஆண்களுக்கு தாடியில் ஆரம்பிக்கும் நரை, பின் மீசைக்கு வந்து அங்கிருந்து தலையின் பகுதிகளுக்கு பரவும். நெஞ்சு முடி நரைக்க சில வருடங்கள் ஆகும். பெண்களுக்கோ உச்சந்தலையில் தொடங்கும். பின் இந்த நரை அப்படியே பிற இடங்களுக்கு பரவி, முதுமைத் தோற்றத்தைத் தரும். ஏன் இது நடக்கிறது? பல இளைஞர்கள் இந்த பிரச்சனைக்காக ஆலோசனை கேட்க வருவது அதிகரித்து கொண்டே போகிறது. ஹார்மோன் சமமின்மை, கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கம், தாழ் தைராய்டிசம், ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை, உணவுச்சத்துப் பற்றாக்குறை, எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது. இதற்கான தீர்வு என்ன? நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம். சீரான முறையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சரியான முடி மற்றும் தலை சரும பராமரிப்பு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் நடவடிக்கைகள் என இவை அனைத்தும் அவசியம். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், முடி நரைப்பதை தடுக்கலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான முடியையும் பெறலாம்.
முடி கொட்டுதல் மற்றும் முடி உடைவதைக் குறைக்கும் வழிமுறைகளை காண்போம்!!
முடி கொட்டுதல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது நமக்கு தெரிவதில்லை. முடி கொட்டும் பிரச்சனையால் நமது இயற்கை அழகும், முடி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. முடியைத் தவறாக பராமரிப்பதன் விளைவாகவே இந்த நிலை ஏற்படுகிறது. ஒருமுறை முடி உதிர ஆரம்பித்தால், இந்நிலை பல ஆண்டுகள் தொடரும். இந்தப் பிரச்சனை இருபாலர் மத்தியிலும் அதிகரித்து கொண்டே வருவதால், பலரும் இதற்கான தீர்வை தேடி அலைகின்றனர். தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய மறக்காதீர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள், தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து, தலைமுடியை மிருதுவாக பராமரித்து வருகின்றனர். குறைந்தது வாரத்தில் இரண்டு தடவை, தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவி, தலைமுடியை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம், அழகான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெறலாம்.
கூந்தல் வறட்சியைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!
ஆண்களுக்கு ஏற்படும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் வறட்சி. ஆனால் இத்தகைய கூந்தல் வறட்சியானது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மருந்துகள் கலக்கப்பட்ட தண்ணீரினால் ஏற்படுகிறது என்றால், அப்போது கூந்தலுக்கு அதிக பராமரிப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய கூந்தல் வறட்சியினால் கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆகவே கூந்தல் வறட்சியை தவிர்த்து, கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இவற்றால் கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக, பொலிவோடு இருக்கும். மேலும் இத்தகைய விஷயங்கள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. இப்போது கூந்தல் வறட்சியைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் கூந்தல் வறட்சியைப் போக்கலாம். சீப்பை தவிர்க்கவும் நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெடிப்பானது கூந்தல் வறட்சியால் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, ஈரமாக இருக்கும் போது தலைக்கு சீப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கூந்தல் உதிர்வதுடன், முடி வெடிப்புக்களும் ஏற்படும். ஹேர் பேக் ஹேர் பேக்குகளில் நிறைய உள்ளன. அதில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியமாக வறட்சியின்றி இருக்கும். பாதாம் பேஸ்ட் பாதாம் பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்தால், வறட்சியினால் பொலிவிழந்து காணப்படும் கூந்தலை பொலிவோடும், பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளலாம். பால் கூந்தல் வறட்சியை தவிர்த்து, அதனை மென்மையாக வைப்பதற்கு, வாரத்திற்கு ஒரு முறை பாலைக் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் நாளடைவில் நல்ல மாற்றம் தெரியும். எண்ணெய்கள் நல்ல வெதுவெதுப்பான தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டும் கூந்தல் வறட்சியைப் போக்கலாம். அதற்கு அந்த எண்ணெய்களை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து அலசினால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். ;தலைக்கு குளித்தப் , பின்னர் அப்படியே உலர வைக்க வேண்டும்.
இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான பல காரணங்கள்!!!
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன? அதிலும் முடி கொட்டுவது என்பது இல்லாமல் இருக்குமா? ஆம், அதுவும் இன்றைய சூழ்நலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது. பொடுகு: தலையின் ஸ்கால்ப் எனப்படும் மேல் தோல் வறண்டு காணப்பட்டாலோ, அல்லது அதிகமாக எண்ணெய் பசையுடன் காணப்பட்டாலோ பொடுகு உண்டாகும். ஷாம்புவை அடிக்கடி உபயோகிப்பதாலோ அல்லது தேவையான அளவு உபயோகிக்காமல் இருந்தாலோ, பொடுகு உண்டாகலாம். பொடுகானது, பூஞ்சை களால் ஏற்படுகிறது என்று சரும நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள். பொடுகு இருப்பதால் உடல் நலம் குன்றியுள்ளது என்று பொருளல்ல. ஆயினும், மஞ்சள் பொடுகால் ஏற்படும் செபோரிக் டெர்மா டிடிஸ் எனப்படும், தோலில் காணப்படும் சிவந்த செதில்செதிலான தடிப்புகள், ஹார்மோன் தொடர் புடையவையாக இருக்கக் கூடும் அல்லது பூஞ்சைகளால் ஏற்படக்கூடும் அல்லது குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

Comments
Post a Comment