பெண்களுக்கு மோசமான உடலுறுவு அனுபவம் ஏற்படுவது ஏன்? எப்போது அப்படி நடக்கும்?


பெண்களுக்கு மோசமான உடலுறுவு அனுபவம் ஏற்படுவது ஏன்? எப்போது அப்படி நடக்கும்?


பாலியல் இன்பம் என்பது எல்லோருக்கும் இன்பமான விஷயமாக இருப்பதில்லை. சில சமயங்களில் ஏராளமான பெண்கள் பாலியல் அசெளகரியத்தை சந்திக்கின்றனர். இதனால் என்னவோ அவர்களுக்கு உடலுறவு என்பது மோசமான ஒன்றாக உள்ளது. இதில் நிறைய பெண்கள் உடலுறவின் போது ஏற்படும் வலியை தங்கள் துணையிடம் கூறுவதில்லை. தாங்கமுடியாத வலி இருந்தால் கூட அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள். 

பெண்கள் மோசமான, வேதனையான மற்றும் திருப்தியற்ற ஒருமித்த உடலுறவை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இங்கே உடலுறுவின் போது ஆண்களின் இன்பமே முன்னுரிமை ஆக்கப்படுகிறது.பெண்கள் தங்கள் வலியை மறைத்துத் தான் பாலியல் வாழ்க்கையை தொடர்கிறார்கள். 

​பாலியல் அசௌகரியம்



இந்த மாதிரி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அசெளகரியத்தை பற்றியும் பாலியல் மற்றும் உறவு குறித்தும் விளக்குகிறார் பாலியல் நிபுணர். அவர் என்ன கூறுகிறார் என்றால் இந்த சமூகத்தில் ஆண்கள் வழக்கப்படும் போதே நிறைய சலுகைகளுடன் வளர்க்கப்படுகின்றன.

ஒரு உணவை பரிமாறும் போது கூட பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. பாலியல் ஆசைகளை ஒரு ஆண் சொல்வதைப் போல பெண்களால் எளிதில் வெளிப்படுத்த முடிவதில்லை. 

பெண்கள் அசெளகரியத்தை புறக்கணித்து தங்கள் சொந்த பாலியல் இன்பத்திற்கு முன்னுரிமை அளிக்காமல் ஆண்களின் இன்பத்தையே காண்கின்றனர். இது நிறைய பெண்களின் மனதில் இருக்கும் ஒரு பெரிய கலையாகவே உள்ளது. 

ஆகவே ஆரோக்கியமான, அதிக அர்த்தமுள்ள உறவுகள் மற்றும் சிறந்த உடலுறவு கொள்ள இந்த சிக்கல்களை எவ்வாறு திறக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 


ஆசை இல்லாமல் உடலுறவு ஏன்




மக்கள் ஆசை இல்லாமல் உடலுறவு கொள்கிறார்கள். அதனால் தான் துணையில் ஒருவர்

பாலியல் இன்பத்தின் போது வலியை அனுபவிக்கிறார்கள் . மோசமான உடலுறுவால் பெண்கள் வலி, அசெளகரியம் மற்றும் உடல்கள் காயமடையும் என்ற பயம் கொள்வதாக 2010 ஆம் ஆண்டில் நடந்த ஆராய்ச்சி கூறுகிறது. 

மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்ணிய உளவியலாளர் தலைமையிலான ஆய்வில், ஆண்களும் பெண்களும் பாலியல் திருப்தி அளவின் மிகவும் மாறுபட்ட குறைந்த முடிவை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். 


மனச்சோர்வு




ஆய்வில் கலந்து கொண்ட பெண் பங்கேற்பாளர்கள் எதிர்மறையான முடிவுகளை தெரிவித்துள்ளனர். மனச்சோர்வு, உணர்ச்சிவசப்பட்ட சோகம், வலி, மற்றும் சீரழிவு போன்ற சொற்களை அவர்கள் கூறினர். எந்த ஆண் பங்கேற்பாளர்களும் இந்த அளவிலான எதிர்மறை பாதிப்புடன் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.

ஆண்கள் பொதுவாக கூறிய விஷயங்கள் தனிமை, கவர்ச்சியற்ற பாலியல் துணையுடன் இருப்பது, மற்றும் போதுமான பாலியல் தூண்டுதல் போன்ற பிரச்சனைகள் தான். 

பெண்களுக்கு புணர்ச்சியை பொருத்தவரை இது பாதுகாப்பற்றது மற்றும் வலியானது, ஆண்களைப் பொருத்தவரை எல்லாவற்றையும் பெறுவது என்ற எண்ணங்கள் இருக்கிறது. 

ஆண்களை விட பெண்கள் உடலுறவு மூலம் நேரடியாக புணர்ச்சியைப் பெறுவது மிகவும் குறைவு என்பதையும் அவர் கூறினார். 


​பெண்கள் ஏன் மோசமான உடலுறவை அனுபவிக்கிறார்கள்




ஏனெனில் பெண்கள் பாலியல் வலியை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். 2.4 சதவீத ஆண்களுடன் ஒப்பிடும்போது, 20.3 சதவீத பெண்கள் வலிமிகுந்த உடலுறவை அனுபவித்ததாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்குறி பெண்ணிறுப்பில் ஊடுருவக்கூடிய வடிவில் இருப்பதால் வலி அதிகமாக பெண்களுக்கு ஏற்படுகிறது. உடலுறுவின் போது ஏற்படும் அதிகமான உயவால் இந்த பிரச்சினை ஏற்படலாம். 

சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு இருப்பதால், ஆண்களுக்கு சிறந்த உடலுறவு கொள்ள உதவுவது பெண்களை விட அதிக முன்னுரிமையை கொண்டதாக உள்ளது.

உதாரணமாக பத்திரிகையாளர் இது குறித்து கூறுகையில் பெண்கள் பாலியல் வலியை விட ஆண்கள் பாலியல் இன்பம் குறித்து ஐந்து மடங்கு எண்ணம் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார்.

அதனால்தான் ஆண்கள் தங்கள் இன்பத்தை காணும் போது எண்டோமெட்ரியோசிஸ் (வலிமிகுந்த உடலுறவை ஏற்படுத்தும்) போன்ற நிலைமைகளைக் கொண்ட பல பெண்கள் கண்டறியப்படாமல் போகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


​மோசமான உடலுறவு ஒருமுறை அல்ல



பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் கடைசியாக எந்த உடலுறவையும் அனுபவிக்கவில்லை என்று கூறுகிறார்கள். பல பெண்கள் உடலுறவு கொள்வது என்பது பாலின உறவுகளில் இருக்கும் கமிட்மெண்ட்டின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள். இதனால் தங்களுக்கு ஏற்படும் வலியை பொருத்து கொள்கிறார்கள்.

நிறைய பெண்கள் ஆசை இல்லாமல் உடலுறவு கொள்கிறார்கள். நிறைய பெண்கள் போலி புணர்ச்சியை அனுபவிப்பதாக பாசாங்கு செய்கிறார்கள என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதே நேரத்தில் ஆண்களின் உணர்வுகளை புண்படுத்தாதபடி பெண்களும் சமூகமயமாக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 


​படுக்கையறையில் பேசுவது கடினம்




பெண்கள் தங்கள் வலியை குறித்து படுக்கையறையில் பேச கடினப்படுகின்றார்கள். நிறைய பெண்கள் பேசனும் என்று நினைத்து கைவிட்டதும் உண்டு என்கிறார்கள்.

பாலியல் வன்முறை நிகழ்வுகளில், பெண்கள் உடலுறவை வேண்டாம் என்று சொல்வது கடினமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான ஒன்று. 

ஆனால் ஆண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு. 

பெண்களுக்கு எதாவது பாலியல் தாக்குதல் நடைபெற்றால் உடனே ஆதரவு சேவைகள் எண்ணை அழைக்கலாம். 


​பாலியல் கல்வி




நம் பாலியல் கல்வியின் ஒரு பகுதியாக வளர்ந்து வரும் இன்பத்தைப் பற்றி நாம் கற்பிக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், பெண்கள் பெரும்பாலும் முதல் முறையாக காயப்படுவார்கள் என்று கூறப்படுகிறார்கள். பாலியலில் இன்பத்தை காண்பது மட்டும் கூடாது அதே நேரத்தில் துணையின் வலி குறித்தும் கவனிக்கப்பட வேண்டு்ம் என்று கற்பிக்கப்படுவதில்லை.

மேலும் பெண்களுக்கு வலி மிகுந்த உடலுறவு ஏற்படும் என்று கூறும் போது ஆரம்பத்திலேயே அவர்கள் பயத்தை சந்திக்கின்றனர். இது அவர்களை வேதனையான ஒரு நிலைக்கு வழிவகுக்கிறது. 

எனவே பெண்கள் தங்கள் உடல்களை பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். ஆண் பிறப்புறுப்பு மற்றும் அவர்களின் உடல்நலம் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன, பெண்களைப் பற்றி குறைவாகவே உள்ளன. எல்லாரும் தன் சொந்த உடலை பற்றி ஆராய முற்படவில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


​பெண்களை தடுத்து நிறுத்திய இரண்டு விஷயங்கள்




பல நூற்றாண்டுகளாக பெண் பாலியல் என்பது இன்பத்தின் கீழ் ஊமையாகி உள்ளது. பொதுவாக பெண்கள் எந்தவிதமான பாலியல் தூண்டுதலும் விருப்பமும் கொண்டு இருப்பது பெரும்பாலும் குற்ற உணர்ச்சி, அவமானம் அல்லது ஒரு அழுக்கு உணர்வை சந்திக்கிறது. 


​பாலியல் செயல்திறன்




பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இந்த செய்தி பெரும்பாலும் ஆபாச வீடியோக்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இதை ஆண்கள் நம்புவதால் அவர்கள் அதை எதிர்ப்பர்க்கிறார்கள். இதே மாதிரி ஆபாச வீடியோக்களை பார்த்து நீண்ட நேரம் நீடிக்க வேண்டும் என்று ஆண்கள் நினைக்கின்றனர். இந்த தேவையற்ற கவலை அவர்களுக்கு விறைப்புத்தன்மைக்கு வழி வகுக்கும்.

பாலியல் செயல்பாடுகள், முன் விளையாட்டுகள் இவற்றை செய்யும் போது உடலுறவு சிறந்ததாக இருக்கும். 


​சுயஇன்பம்




ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அதிர்வு இருக்க வேண்டும். உங்க உடலை பற்றி நீங்கள் அறிந்து கொள்வது பாலியல் குறித்த உங்கள் வரையறையை விரிவுபடுத்த உதவும்.

ஒருவருக்கொருவர் மசாஜ் செய்வது, பரஸ்பர சுயஇன்பம் செய்ய வழி வகுக்கும். இதே மாதிரி நிறைய ஆண்கள் தங்கள் துணையிடம் பேசி பரஸ்பர புரிதலை வளர்த்துக் கொள்கின்றனர். 

​உங்கள் துணையிடம் பேசுங்கள்



இது எளிதானது அல்ல என்றாலும், உங்கள் பாலியல் துணையுடன் பேசுவது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் சந்தோஷமாக இருப்பதைப் பற்றியும், நீங்கள் செய்யாததைப் பற்றியும் பேசுங்கள் உண்மையான அபாயகரமானதைப் பற்றி வெளிப்படையான உரையாடலைப் பெறுங்கள். 

பாலியல் வாழ்க்கையில் தகவல் தொடர்பு முக்கியமானது. எனவே உங்களுக்கு எந்த சிக்கல்கள் இருந்தாலும் உங்க துணையிடம் கூறுங்கள். ஒரு நல்ல துணை எப்போதும் உங்க பேச்சை காது கொடுத்து கேட்பார். 


​மருத்துவர் உதவியை நாடலாம்


ஒரு வேளை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் மருத்துவர் உதவியை நாடுங்கள். உங்கள் இன்பத்திற்கு முன்னுரிமை அளிப்பது மதிப்புக்குரியது, ஏனென்றால் பெண்கள் சிறந்த உடலுறவில் ஈடுபடுவதால் எல்லோரும் பயனடைவார்கள்.பாலியல் வாழ்க்கை மேம்படுத்தப்படும்போது எல்லோரும் பயனடையலாம், இதில் அனைத்து பாலின வெளிப்பாடுகளும் அடங்கும். உங்க துணையின் பாலியல் தேவை, இன்பம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஆசையையும் கேட்டு நிறைவேற்றுங்கள் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!