உங்களது முகம் சதுரமா? வட்டமா?… இதோ முகஅமைப்பை வைத்து குணாதிசியத்தை தெரிஞ்சிகலாம்...

நம்மில் அனைவருக்கும் வேறுவேறு விதமான வடிவத்தில் முகம் அமைந்திருக்கிறது. அதை வைத்து அவர்களின் குணாதிசயங்களை எளிதில் கண்டறிய முடியும் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். ஒவ்வொரு வகையான முக அமைப்பிற்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும்.


அதன்படி உருண்டை வடிவ முக அமைப்பு உள்ளவர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், பூஜை, விரதங்களில் அதீத ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பர். பெண்களில் உருண்டை வடிவ முக அமைப்பு உடையவர்கள் லட்சியவாதியாகத் திகழ்வார்கள்.


சதுர வடிவ முகம் உடையவர்கள் வீரம் நிறைந்தவர்களாகவும், எளிதில் கோபப்படுபவர்களாகவும் இருப்பர். மேலும் அனைத்துப் பிரச்சனைகளையும் உடல் வலிமையால் தீர்க்க முயற்சிப்பார்கள். எவருக்கும் எளிதில் பணிந்துபோக விருப்பம் இருக்காது. இசையில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர்.


நீள் சதுர முக அமைப்பைப் பெற்றவர்கள், அடக்கமும் அமைதியும் நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எந்த விஷயத்தையும் பலமுறை யோசித்து செய்வார்கள். வாழ்வில் எல்லாக் கட்டத்திலும் நிதானமாக யோசித்தே முடிவெடுப்பார்கள். மிகப் பணிவுடன் நடந்துகொள்வார்கள்.


முக்கோண வடிவ முக அமைப்பை கொண்டிருக்கும் ஆண்கள் மிகவும் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள். யாரையும் நம்பமாட்டார்கள். அனுபவ அறிவு அதிகம் உடையவர்களாக திகழ்வார்கள். ஏற்றமும் இறக்கமும் சரிசமமான வாழ்வு அமையும். 


முட்டை வடிவ முக அமைப்பு கொண்டவர்கள், நடுநிலை இயல்பு உடையவர்களாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்கள். நீடித்த ஆயுளுடன் வாழ்வார்கள்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!