அதிகாலையில் வெளியான மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு !!!


பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியிட போவதாக தெரிவித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று அதிகாலை மிகச் சரியாக 12 மணியளவில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

மிஷ்கினின் அடுத்த படம் 'பிசாசு 2' என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இந்த படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகிறார். இந்த படத்திற்கு அவர் இசையமைப்பாளர் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மிக விரைவில் தொடங்கவுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மிஷ்கின் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மிஷ்கினின் அடுத்த படத்தில் சிம்பு, அருண்விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது சூப்பர்ஹிட் படமான 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகமே அவரது அடுத்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குரிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!