மனசு சரி இல்லையா...?! | Tamil Motivational Stories
மனசு சரி இல்லையா...?!
மனசு சரியில்லை.. இது பெரும்பாலும் பலரும் அடிக்கடி சொல்லும் வார்த்தை.. உண்மையில், நாம மனசை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். நாம் மனசை சரியாக வைத்திருந்தால் அதுவும் சரியாக இருக்கும்.
மனசை சந்தோசமாகவோ அல்லது சோகமாகவவோ வைத்திருப்பது நம் கையில் தான் உள்ளது. எப்பொழுதும் நம் மனதை நாம் நினைத்தால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். சிலர் எல்லாமிருந்தும் அவரிடம் மகிழ்ச்சி இருக்காது. சிலரிடம் எதுவும் இல்லை என்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பர். முதல் வகையைச் சார்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். இத்தகைய மனோபாவம் கொண்டவர்கள் தேவையில்லாமல் சிறு சிறு விஷயங்களுக்குக் கூட கவலைப்படுவர். இதனால் இவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் உணர்வதில்லை.
இன்னொரு வகையினர் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. அன்றைய தினத்தை தன் குடும்பத்தோடு இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பர். இந்த மனோபாவம் உடையவர்களிடம் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவியுங்கள். மனதில் கவலை இருந்தால் இறை வழிபாடு செய்யுங்கள் அல்லது உங்கள் வீட்டுக் குழந்தைகளுடன் பத்து நிமிடமாவது விளையாடுங்கள். பிறகு பாருங்கள். கவலை இருந்த இடமே தெரியாது. இன்று பலர் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தின் சின்ன சின்ன சந்தோசங்களை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று நினைக்க வேண்டும் அது போல உங்கள் வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடுங்கள். மனைவி குழந்தைகள் நண்பர்கள் அவர்களுடைய வெற்றிகளையும் கொண்டாடுங்கள்.
பிரச்சினை இல்லாத மனிதரே கிடையாது ஆனால் அதையே நினைத்து வருத்தப்பட்டால் நம்மால் நம் வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது. மனசை சந்தோசமா வச்சுக்கங்க. பிடித்த இசை கேளுங்க. பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள்.கிடைத்த ஒரு வாழ்க்கையை அடு்த்தவர் பொறாமைப்படும் அளவிற்கு சூப்பரா அனுபவியுங்கள். சந்தோசம் அது தான் வாழ்க்கையின் ஜீவன். மனசு சரி இல்லையா கலலைகளை மறந்து வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் கொள்ளுங்கள். மனசை மகிழ்ச்சியா வைத்துக் கொள்ளுங்கள் முகத்தில் புன்னகை தவழட்டும்.
Comments
Post a Comment